சினிமாவில் பிரித்து வைத்து அழகுபார்த்த அனைவருக்கும் சுருக்கென இருக்கும் வகையில் பரத்துடன் சந்தியா வெளியிட்ட புகைப்படம்..!

0
bharath
bharath

barath and santhya latest photos: தமிழ் திரை உலகில் பரத் நடிப்பில் வெளிவந்த காதல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சந்தியா. இவ்வாறு இந்த திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெளுத்து வாங்கிவட்டது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து காதல் சந்தியா பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  அந்த வகையில் சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தில் கூட சிம்புவிற்கு தோழியாக நடித்து இருப்பார்.

மேலும் தமிழில் வந்த வேகத்திற்கு பிரபலமான நடிகை சந்தியா அதன்பிறகு மலையாளம் கன்னடம் தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் தனது பெயரை பதிக்க ஆரம்பித்தார்.  பொதுவாக பெண்களுக்கு கல்யாணம் என்பது ஒரு மிகப்பெரிய தடையாக இருந்து வருகிறது.

அதேபோலத்தான் நடிகை சந்தியாவின் வாழ்விலும் திருமணத்திற்கு பிறகு நடிகை சந்தியா திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார்.அதுமட்டுமில்லாமல் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் சொல்லும்படி கிடைக்கவும் இல்லை.

அப்படியே வாய்ப்புகள் கிடைத்தாலும் வெறும் சிறப்புத் தோற்றம் தான் முக்கிய கதாபாத்திரம் என்று ஏதும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு கதாபாத்திரமும் கிடைக்கவில்லை இந்நிலையில் சமீபத்தில் கண்மணி சீரியலில் கூட நடிகை சந்தியா சிறப்பு தோற்றத்தில் தென்பட்டார்.

பொதுவாக நடிகைகளுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கா விட்டால் உடனே கையிலெடுப்பது போட்டோ ஷூட் தான் அந்த வகையில் தன்னுடன் காதல் திரைப்படத்தில் நடித்த நடிகர் பரத்துடன் போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் தாறுமாறாக வளம் வந்து கொண்டிருக்கிறது.

santhya
santhya
santhya
santhya