பெங்களூர் ஹைவே – வை block அஜித் ரசிகர்கள் – மாற்று பாதையில் சென்ற வண்டிகள்.! வைராலகும் வீடியோ.

அஜித் என்ற ஒரு பெயரை சொன்னாலே போதும் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள் மூன்று வருடங்கள் கழித்து ஒரு வழியாக பிப்ரவரி 24 இன்று திரையரங்கில் ஒருவழியாக வலிமை படம் ரிலீசானது. இரவில் இருந்தே ரசிகர்கள் திரையரங்கை நாடி வெடிகளை வெடித்து,பாலபிஷேகம் செய்தும் கொண்டாடினார்.

அதோடு மட்டுமல்லாமல் மேளதாளம் அடித்து இரவு முழுவதும் தூங்காமல் கொண்டாடும் அசத்தினர். திரை அரங்க உரிமையாளர்கள் ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் ரசிகர்கள் மறுபக்கம் சாலை ஓரங்களில் நின்று கொண்டாடியதால் போக்குவரத்து வசதி சற்று தாமதமானது.

அதிலும் குறிப்பாக பெங்களூர் ஹைவே – வை முடக்கி ரசிகர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சென்னையில் உள்ள ஜோதி தியேட்டரில் கூடிய ரசிகர்களால் திரையரங்கையும் தாண்டி ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால் வேறுவழியில்லாமல் ரோட்டில் கொண்டாட ஆரம்பித்தனர் இதனால் போக்குவரத்து வாகனங்கள் போவதற்கு சில மணி நேரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் மாற்றுப்பாதையில் வண்டிகள் போனது அந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதின. ஜோதி திரையரங்கின் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா ரசிகர்களின் கூட்டத்தை பார்த்து வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கொண்டாடியுள்ளார். அதில் சில பதிவுகளையும் போட்டுள்ளார் பெங்களூர் ஹைவே பிளாக்.. டேக் டைவர்ஷன் கோயம்பேடு மார்க்கெட் சம்பவம்  என போட்டுள்ளார்.

இச்செய்தியை தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது மேலும் தல ரசிகர்களின் கூட்டத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதோ ஜோதி திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா வெளியிட்ட வீடியோ.

Leave a Comment