பாலாஜியை கட்டிப்பிடித்து அழும் அர்ச்சனா இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.!

0
balaji
balaji

கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்து வருகிறது அந்த வகையில் அர்ச்சனாவிற்கும் பாலாஜி முருகதாஸ் அவர்களுக்கும் சண்டை ஆரம்பித்துவிட்டது, கடந்த இரண்டு நாட்களாக தன்னை உதாசீனப்படுத்தும் பாலாஜியை கார்னர் செய்ய திட்டமிட்டுள்ளார் அர்ச்சனா.

அதிலும் அர்ச்சனா பாலாஜியை பார்த்து குழந்தை என்று கூறியதால் செம கடுப்பில் இருக்கிறார் பாலாஜி, அர்ச்சனா இப்படி ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதால் விமர்சனத்துக்கு ஆளாகி வந்தார், அதுவும் சில நாட்களாகவே அர்ச்சனா வனிதாவை போல் மோசமாக நடந்து கொள்கிறார் என குற்றச்சாட்டை வைத்து வருகிறார்கள் ரசிகர்கள்.

மேலும் குருபிசம் கிரியேட் பண்ணி நடந்துகொள்வதாக பச்சையாக தெரிகிறது எனவும் ரசிகர்கள் கூறுகிறார்கள், இதிலும் இரண்டாவது ப்ரோமோவில்  பாலாஜி மற்றும் ஷிவானிக்கு இடையே கெமிஸ்ட்ரி ஒத்து வந்துள்ளதாகவும் பாலாஜியை சம்யுத்தா கிண்டல் செய்து வருகிறார் இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது புரோமோ இன்று வெளியாகியுள்ளது.

அதில் அர்ச்சனா மற்றும் பாலாஜி அழுகிறார்கள், அதில் பேசிய அர்ச்சனா பாலாஜியை பார்த்து உனக்கு என்னை பிடிக்கவில்லை என்பது எனக்கு நல்லாவே தெரியும், எனக்குள் இருக்கும் ஒரு அம்மா திரும்பத் திரும்ப நான் தொலைத்த குழந்தையை உனக்குள் தேடுகிறேன். ஆனால் நீ அந்த குழந்தை இல்லை என்று நீ எனக்கு சொல்லியாச்சு..

அதனால் இனி நான் தள்ளி நிற்கிறேன் உனக்குள் அது இல்லை என்று எனக்கும் தெரிந்துவிட்டது என்னை வேண்டாம் வேண்டாம் என்று கூறினால் நான் எங்கடா போவேன் என அர்ச்சனா அழுதுகொண்டே கூறுகிறார் அப்பொழுது ஆராரிராரோ பாடல் ஒலிக்கிறது.

பின்பு பாலாஜி கண்ணீருடன் அர்ச்சனா அமர்ந்திருக்கும் இடத்துக்குப் போய் அர்ச்சனாவை கட்டி அணத்து அழுகிறார். இந்த எமோஷனலான காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.