இந்திய அளவில் முதல் மார்க் எடுத்ததற்கு காரணமே பாலா சார் தான்.! வெளியானது வாத்தி படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்…

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் வசூலிலும் நல்ல லாபம் பார்த்து வந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கியா அட்லூரி அவர்கள் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது கல்வியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் அமைந்துள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இந்த படத்தில் அமைந்துள்ள வா வாத்தி பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்தது.

இந்த வா வாதி பாடல் நேற்று வீடியோவுடன் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு வீடியோவை பட குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகமடைய வைத்து உள்ளனர். அதாவது வாத்தி படத்தில் இடம் பெற்று இருந்த ஒரு காட்சியை நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் அந்த நீக்கப்பட்ட காட்சியை பட குழு தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கிறது.

இந்த வீடியோவில் இந்தியாவின் முதல் மதிப்பெண் எடுத்த மாணவனாக தனுஷின் மாணவன் பேசும் வீடியோவும் இறுதியில் தனுஷ் கண்கள் புன்னகையுடன் பார்ப்பதும் போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷ் அவர்கள் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட்டுகளும் அவபோது வந்துகொண்டே இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment