விஜய்செதுபதி படபிடிப்பில் என்னை பிச்சைக்காரர்களுடன் சாப்பிட சொன்னார்கள்.! கண்கலங்கிய பாலாசரவணன்.

தமிழ்சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை பல காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பாலசரவணன் இவர் ஆரம்ப காலகட்டத்தில் சின்ன திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலம் நடித்து வந்தார். அதன்பிறகு சமீபகாலமாக வெள்ளித்திரையிலும் தன்னுடைய காமெடி நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் வெள்ளித்திரையில் 2013ஆம் ஆண்டு வெளியாகிய குட்டிப்புலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது அதனைத் தொடர்ந்து திருடன் போலீஸ், டார்லிங், வலியவன், வேதாளம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டான் திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் இவரின் காமெடி மக்களுக்கு ஓரளவு பிடித்துவிட்டது அதனால்   இவரையும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்த நிலையில் பாலசரவணன் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த பேட்டி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய பண்ணையாரும் பத்மினியும் திரை படத்தில் பீடா என்ற கதாபாத்திரத்தில் பாலசரவணன் நடித்திருப்பார் அதைப்பற்றி தான் தற்பொழுது இந்த பேட்டியில் கூறியுள்ளார்.  அவர் கூறியதாவது பண்ணையாரும் பத்மினியும் திரை படத்தில் மேக்கப்மேன் என்று யாரும் கிடையாது நானே தான் தயாராக வேண்டும் அதற்காக 55 நாட்கள் தலை குளிக்காமல் முடியை ஜடை பின்னும் மாதிரி வளர்த்து வந்தேன்.

அப்பொழுது அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டேன். அந்த சமயத்தில் அழகர் கோவில் பக்கத்தில் உள்ள கிராமத்தில் 55 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது அப்பொழுது அந்த ஊரில் கிடா வெட்டு திருவிழா நடந்துள்ளது அதற்காக ஊர் மக்கள் அனைவரும் படபிடிப்பில் இருக்கும் அனைவரையும் அழைத்து விருந்துக்கு வர சொன்னார்கள். அந்த சமயத்தில் எனக்கு சூட்டிங் இருந்ததால் படக்குழுவினர் அனைவரும் கிளம்பி முன்னாடி சென்று விட்டார்கள் அதன் பிறகு படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு நான் சென்றேன்.

மூஞ்சி எல்லாம் கழுவி கொண்டு தான் சாப்பிடுவதற்கு சென்றேன் அப்பொழுது ஊர்க்காரர் ஒருவர் என்னை தடுத்து நிறுத்தி தம்பி நீ எங்க போற அங்க எல்லாம் நீ போகக்கூடாது எனக் கூறினார் அப்பொழுது நானும் அவர்களுடன் வந்தவர்தான் என கூறினேன் அதையெல்லாம் அந்த ஊர்க்காரர் காதில் வாங்காமல் ஒரு இடத்தை காட்டி அங்கே போய் உட்காரு என கூறினார் அந்த இடத்தில் ஏற்கனவே இரண்டு பிச்சைக்காரர்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதைப் பார்த்து என்ன செய்வது என்று மனம் உடைந்து போனேன் நம்ம நிலைமை நினைத்துக் கொண்டிருந்தேன் அதன் பிறகு விஜய் சேதுபதியை வரச்சொன்னேன் இவரை உள்ளே விடுங்கள் என கூறினார் அதன்பிறகுதான் குட்டிப்புலி படத்தில் நடித்த நடிகர் என்று சொன்ன பிறகு ஆமாம் தம்பி இதை நீ முதலிலேயே கூறக் கூடாதா என சொன்னார்கள் சரி உன் மூஞ்சியை கழுவிக்கொண்டு இருக்கலாமே என கூறினார் நான் மூஞ்சை கழுவிக்கொண்டு தான் வந்தேன் என கூறினேன் ஆனாலும் இப்படி ஒரு கோலத்தில் இருக்கிறேன் என்று சமீபத்தில் அந்த பேட்டியில் கூறினார். இதுபோல் தருணங்களில் என் வாழ்க்கையில் மறக்க முடியாத  சம்பவம் என பாலா சரவணன் அந்தப் பேட்டியில் கூறினார்.

bala saravanan
bala saravanan

Leave a Comment