பாலா சொன்ன ஒரு வார்த்தை கதறி அழுத தீனா.! வீடியோவை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்.

0

vijay tv bala video: விஜய் டிவியில் தொடர்ந்து வித்தியாசமான பல காமெடி ஷோ களை நடத்தி வருகிறது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவிதான்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் பல நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒளிபரப்பாக உள்ளது அந்நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பல வெள்ளித்திரை பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் அதில் தனது காமெடி திறமையினால் பிரபலமடைந்த வெட்டுக்கிளி பாலா எமோஷனலாக அழுதுகொண்டே நான் பர்பாமன்ஸ் செய்யும் பொழுது என் மேல் சுட சுட இருக்கும் டீயை கூட ஊத்தி உள்ளார்கள் என்று மிகவும் வருத்தமாக தெரிவித்தார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த தீனாவும் பாலா அழுததைப் பார்த்து தினமும் அழுது கொண்டே எங்களுக்கு பலர் கேவலமாக திட்டி மெசேஜ் அனுப்புவார்கள். ஆனால் ஒரு சிலர் நீங்கள் இருந்தால் தான் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் உங்கள் காமெடி மிகவும் சூப்பராக இருக்கிறது என்று கூறுவார்கள்.

அவர்களுக்காக மட்டும் தான் நாங்கள் இன்று வரையிலும் காமெடி நடிகராக இருந்து வருகிறோம் என்று கூறியிருப்பார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.