வணங்கான் படத்திற்காக அருண் விஜயின் லுக்கையே மாற்றிய பாலா.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. லீக்கான புகைப்படம்…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வருபவர் இயக்குனர் பாலா. இவர் பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு தனித்துவமான கதைகளைக் கொண்டு உருவாக்கி பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் பாலாவின் படம் பல திருப்பமுடியை ஏற்படுத்தி இருக்கிறது அந்த அளவிற்கு பாலா அவர்கள் தன்னுடைய படத்திற்கு ஏற்றவாறு நடிகர்களின் எனர்ஜியை இழுத்துக் கொள்வார். அப்படி இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் திரைப்படத்தில் தற்போது அருண் விஜய் நடித்து வருகிறார்.

ஏற்கனவே வணங்கான் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்த நிலையில் பாடப்பிடிப்பு தளத்தில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சூர்யா அவர்கள் இந்த படத்திலிருந்து விலகினார். இந்தப் படத்தை சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வணங்கான் படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சூர்யா அவர்கள் இந்த படத்தில் இருந்து விலகியதால் இந்த படத்தின் படபிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பாலா அவர்கள் சூர்யாவிற்கு ஏற்ற கதை இது கிடையாது அதனால்தான் அவர் விலகிக் கொண்டார் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் பாலா.

அதன் பிறகு தற்போது வனங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் நடிப்பதாக சில தகவல் வெளியாகி இருந்தது இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று லீக் ஆகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் வணங்கான் திரைப்படத்திற்காக அருண் விஜயின் புதிய லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ அந்தப் புகைப்படம்.

vanangaan
vanangaan

Leave a Comment