பாலாவின் படைப்பில் சூர்யா வெளியிட்ட விசித்திரன் மிரட்டலான டீசர் இதோ .!

0

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா இவர் தமிழில் பல வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படத்தை இயக்கியுள்ளார், பாலாவின் திரைப்படத்தில் நடிப்பதற்கு பல நடிகர் மற்றும் நடிகைகள் பயப்படுவார்கள் என கூறுவார்கள்.

அதற்கு காரணம் நடிப்பு இல்லை என்றால் பாலாவின் படத்தில் நடிக்க முடியாது என்பதுதான் காரணம் ஏனென்றால் ஒரு கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தத்ரூபமாக தனது படத்தில் காட்டி இருப்பார்.

எடுத்துக்காட்டாக பிதாமகன் திரைப்படத்தை கூறலாம் அந்த திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அச்சு அசல் அதேபோலவே நடிகர் நடிகைகளை மாற்றி படத்தை இயக்கி வெற்றி கண்டவர். அதேபோல் சேது திரைப்படத்தையும் கூறலாம்.

இயக்குனர் பாலா பாலுமகேந்திராவிடம் திரைப்படக் கலையை கற்றுக் கொண்டவர்,  இவர் தமிழில் முதன்முதலில் சேது என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  தனது பி ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படத்தை தயாரித்து வருகிறார்.

பாலா பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் படத்தை தயாரிக்கிறார் என்பது ஒரு சிலருக்கே தெரியும்,  அந்த வகையில் மலையாளத்தில் ஹிட் அடித்த ஜோசப் என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக்கான விசித்திரன் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஆர்கே சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் விசித்திரன் திரைப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் பாலா திரை படத்தை சூர்யா வெளியிட்டுள்ள செய்தி பலரும் பிரபலமாக பேசிவருகிறார்கள்.