இயக்குனர் பாலாவின் பரதேசி பட நடிகையா இது.! எலும்பும் தோலுமா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா…

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். இவர் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

அதுமட்டுமில்லாமல் பாலாவின் இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர் மற்றும் நடிகைகள் தயங்குவார்கள் ஏனென்றால் அந்த அளவு தன்னுடைய படம் ரியலாக இருக்க வேண்டுமென அடி மட்டமாக இறங்கி படங்களை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தை இயக்கினார் ஆனால் அந்த திரைப்படம் சரியாக வரவில்லை என திரைக்கு வராமல் நிறுத்தப்பட்டது பின்பு OTT இணையதளத்தில் வெளியிடப்பட்டது.  பாலா இயக்கிய படத்தில் மிகவும் மோசமான திரைப்படமாக வர்மா திரைப்படம் அமைந்தது.

பாலா இயக்கத்தில் வெளியாகிய படம் பரதேசி திரைப்படத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாராட்டை பெற்றவர் நடிகை வேதிகா. இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பே ஆர்யாவுடன் மதரசி திரைப்படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

அதன் பிறகு இவருக்கு சரியான பட வாய்ப்பு அமையாததால் மற்ற மொழித் திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்பொழுது இவர் தமிழ் மட்டுமல்லாமல்  மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.

வேதிகா பரதேசி திரைப்படத்திற்கு பிறகு காவிய தலைவன் சக்கரகட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு நல்ல திருப்பு முனையாக இருந்த திரைப்படம் முனி இந்த திரைப்படம் தான் இருவருக்கும் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தது.

vedhika
vedhika

தற்பொழுது இவர் பிரபுதேவாவுடன் வினோதன், ஜங்கிள் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் வேதிகா அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் ஸ்லிம்மாக எலும்பு தெரியும்படி உடலை வைத்துக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Comment