பாலாவின் வர்மா வெளியாகுமா.? நிலைமைதான் என்ன.?

தமிழ் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையை எடுத்து இயக்குவதில் திறமை படைத்தவர் பாலா. அவருக்கு அப்படி ஒரு சிறப்பு இருக்க காரணம் அவருடைய மானசீக குருவான மகேந்திரன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பல வெற்றி படங்களை கொடுத்து உள்ளார் அதிலும் குறிப்பாக சேது, நந்தா,பிதாமகன் போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர்.

இருப்பினும் கடைசியாக பாலா அவர்கள் நாச்சியார் படத்தை இயக்கினார் இதில் ஜிவி பிரகாஷ் நாயகனாகவும் மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகாவும் நடித்தார். இப்படம் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு  வெளியானது. இதனைத் தொடர்ந்து இவர் வர்மா என்ற படத்தை இயக்கி வந்தார் பாலா ஆனால்  சில பிரச்சனைகளால் படம் வெளியாகாமல் போனது.

இந்நிலையில் இப்படத்தை தற்பொழுது E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது உள்ளது. இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் மற்றும் மேகா சவுத்ரி மற்றும் ஈஸ்வரி ராவ் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் நடித்திருந்தார்கள். பாலா இயக்கிய வர்மா படம் விரைவில் வெளியிட இருக்கிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது.

பாலா திறமை அனைவருக்கும் தெரியும் அதனால் வர்மா வெளியானால் தான் தெரியும் ஆதித்யா வர்மா எதற்காக எடுத்தார்கள் என்று.

varma
varma

Leave a Comment