புதிய திரைப்படத்தை இயக்க இருக்கும் பாலா.! ஹீரோ யார் தெரியுமா.

0
Bala
Bala

பாலா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் கடைசியாக இயக்கிய திரைப்படம் விக்ரம் மகனை வைத்து அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின்  ரீமேக்காகும் இதற்கு ‘வர்மா’ என பெயர் வைத்திருந்தார்கள்.

ஆனால் இந்த திரைப்படம் இயக்கியதில் திருப்த்தி இல்லை என்று தயாரிப்பு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது அதனால் இந்த திரைப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டு வேறு ஒரு புதுமுக இயக்குனரை வைத்து திரைப்படத்தை முடித்தார்கள்.

மனதளவில் பாதிக்கப்பட்ட பாலா தற்போது புதிய படத்தை இயக்குவதற்கு தயாராகிவிட்டார், நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இதற்கு முன் பாலா இயக்கிய தாரை தப்பட்டை திரைப்படத்தில் சுரேஷ் வில்லனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு மருது திரைப் படத்திலும் நடித்திருந்தார் மேலும் பில்லாபாண்டி திரை படத்தில் ஹீரோவாக சுரேஷ் நடித்திருந்தார், தற்பொழுது பாலாவின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார், இந்த திரைப்படம் மலையாளத்தில் ஹிட் அடித்த ஜோசப் திரைப்படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது மலையாளத்தில் இந்த திரைப்படத்தில் ஜோஜி ஜார்ஜ் ஹீரோவாக நடித்திருந்தார்.

பாலா இயக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘ஜோசப்’ என தலைப்பு வைக்கப்பட இருப்பதாக கூறுகிறார்கள், மேலும் இந்த திரைபடத்தை பாலாவே தயாரிக்கிறார் என்ற தகவலும் கசிந்துள்ளது. எது எப்படியோ பாலா மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ஒரு அற்புதமான படத்தைக் கொடுப்பார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.