அந்த நடிகையை நீ காதலிக்கிறியா.? இப்படி சிபாரிசு செய்யற.. சூர்யாவிடம் நேருக்கு நேராக கேட்ட பாலா.! எந்த படத்தில் தெரியுமா

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டு இருப்பவர் சூர்யா இவர் கடைசியாக நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து தனது 42 வது திரைப்படத்தில் சூர்யா விறுவிறுப்பாக நடித்த வருகிறார் இந்த படம் ஒரு சங்ககாலத்து படமாக உருவாகி வருகிறது.

இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன்  உடன் கூட்டணி அமைத்து வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் இப்படி திரையுலகில் ஓடி கொண்டிருக்கும் சூர்யா ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும்  ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். சூர்யா எப்படி படங்களில் நடித்து வருகிறாரோ..

அதேபோல ஜோதிகாவும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். படங்களில் இப்படி ஒரு பக்கம் நல்லா காசு கட்ட மறுபக்கம் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர் இப்பொழுதும் கூட சூர்யா ஜோதிகா பார்ப்பதற்கு நல்ல காதல் ஜோடி போலவே தான் தெரிகிறார்கள் இப்பவே இப்படி என்றால் ஆரம்பத்தில் எப்படி இருந்திருப்பார்கள்.. இந்த நிலையில் சூர்யா  – ஜோதிகா பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது.  சூர்யா வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவரது படங்களில் ஜோதிகாவை நடிக்க வைக்க பல இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்துள்ளார்.

அப்படி பாலா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நந்தா இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக லைலா நடித்திருப்பார் ஆனால் உண்மையில் இந்த படத்தில் ஹீரோயின்னாக நடிக்க வேண்டியது ஜோதிகா தானாம்.. பலமுறை இயக்குனரிடம் இந்த படத்தில் ஹீரோயின்னாக ஜோதிகாவை நடிகையையுங்கள் என கூறி இருக்கிறார் சூர்யா.. ஆனால் இயக்குனரோ இலங்கையில் இருந்து அகதியாக வரும் பெண் ஜோதிகாவை விட லைலாவுக்கு தான் செட் ஆகும் எனக் கூறி இருக்கிறார்.

ஆனால் திரும்பத் திரும்ப ஜோதிகாவை ஹீரோயின்னாக போடலாம் என இயக்குனருடன் கேட்டுள்ளார் சூர்யா ஒரு கட்டத்தில் கடுப்பான இயக்குனர் பாலா என்னப்பா நீ புரிஞ்சுக்கவே மாட்டேங்குற அந்த நடிகையிடம் அப்படி என்ன இருக்கு.. என்ன காதலிக்கிறாயா என கேட்டுவிட்டார் பாலா அன்றிலிருந்து அந்த பேச்சை எடுக்கவே இல்லையாம் சூர்யா இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வருகிறது.

Leave a Comment