தனது மகளிடம் வாய்தவறி உண்மையை உளறி மாட்டிகொண்ட ராதிகா.! பரபரப்பாகும் இன்றைய முழு எபிசோட்.!

0
bhaakylakshmi
bhaakylakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான சீரியலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் கோபி பாகியாவை திருமணம் செய்துகொள்வார் ஆனால் ராதிகாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார் ராதிகாவும் கோபியும் திருமணம் செய்து கொள்வாரா இல்லையா என்பதுதான் சீரியலின் மையக்கரு.

இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடில்  கோபி போலீஸ் ஸ்டேஷனில் ராதிகாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறுகிறார் அதற்கு ராதிகாவும் வேறு வழியில்லாமல் ஆமாம் என்று கூறி விட்டு தப்பித்து விடுகிறார். அதன்பிறகு கோபி ராதிகாவின் அண்ணன் மற்றும் அம்மாவிடம் எப்படியாவது என்னை ராதிகாவிடம் சேர்த்து வையுங்கள் நான் ராதிகா சொல்வது போல் டீச்சருடன் சந்தோஷமாக இல்லை என்னை என் வீட்டில் வந்து பாருங்கள் நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்று தெரியும் என சந்துருவிடம் கோபி கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் ராதிகாவை எனக்கு இப்பொழுதுதான் தெரியும் என நினைக்காதீர்கள் எனக்கு திருநெல்வேலியில் இருக்கும் பொழுதே ராதிகாவை தெரியும் என கூறுகிறார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பாக்கிய திடீரென ராதிகா வீட்டிற்கு செல்கிறார் அங்கு ராதிகாவிடம் பாக்கியா பல கேள்விகளை கேட்கிறார் அதற்கு ராதிகா என்னை அவர் ஏமாற்றி விட்டார் அதை எப்படி உங்களிடம் கூறுவேன் என கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் ராதிகா தன்னை மிஸ் பண்ண கூடாது என்பதற்காக தான் பொய் சொன்னதாக அவர் கூறுகிறார் என ராதிகாவிடம் கூறுகிறார் உடனே பாக்கியா அவர் கூறுவதில் உண்மை இருக்கலாமே உன்னை மிஸ் பண்ணக் கூடாது என்பதற்காக சில பொய்களை கூறி இருக்கலாம் என ராதிகாவை சமாதானம் செய்கிறார் பாக்கியா.

ஆனால் ராதிகா உங்களுடைய கணவர் தான் இதுபோல் செய்தார் என்பதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் முழி பிதுங்கி நிற்கிறார்.   ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன் இருவரும் சாப்பிட்டுக் கொண்டே ராதிகா கூறியதுபோல் கோபிக்கும் ராதிகாவுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டியதுதான் என கூறுகிறார் உடனே ராதிகா அதற்கு கோபமடைகிறார்.

நான் எக்காரணத்தைக் கொண்டும் கோபியை   திருமணம் செய்து கொள்ள முடியாது டீச்சரை நினைத்தாலே எனக்கு கோபியை திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறி விடுகிறார் ஆனால் ராதிகாவின் அண்ணன் மற்றும் அம்மா பாக்கியா உன்னிடம் வந்து நடிக்கிறார் என கூறுகிறார்கள். உடனே ராதிகா கோபப்பட்டு தன்னுடைய மகள் இருக்கும் இடத்திற்கு செல்கிறார் அங்கு ராதிகாவின் மகள் உன்னால் தான் பிரச்சனை நீதான் மாமா பாட்டி அங்கிள் என அனைவரிடமும் சண்டை போடுகிறாய் என கூறுகிறார் ராதிகாவின் மகள்.

உடனே ராதிகா வாய் தவறி பாக்கியா அண்ணி பாவம் என கூறுகிறார் உடனே மகளுக்கு சந்தேகம் ஏற்படுகிறது  எதற்காக பாக்கியா அண்ணி  பாவம் என்கிறீர்கள் என கேள்வி எழுப்புகிறார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.