தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது டிஆர்பி யில் யார் முதலிடம் பிடிக்க போகிறார்கள் என ஒவ்வொரு தொலைக்காட்சியும் போட்டி போட்டுக் கொண்டு புதிய புதிய சீரியல் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதேபோல் படத்தின் பெயர்களில் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் பல சீரியல்களை உதாரணத்திற்கு கூறலாம் இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலும் உண்டு இந்த சீரியலை காண மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ஆரம்பத்தில் மக்களிடம் சரியான வரவேற்பை பெறாத இந்த சீரியல் போகப்போக சாதாரணமாகவும் யதார்த்தமாகவும் வாழ்க்கையில் நடக்கும் இன்னல்களை காட்டி வருவதால் மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு குடும்பத் தலைவியின் கதை என்ற அந்தஸ்துடன் தொடங்கிய இந்த தொடரில் அன்றாடம் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அப்படியே காட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையிள் இந்த சீரியலில் ஒரு திருநங்கையை தத்தெடுத்து மகளாக வளர்த்து வருகிறார்கள் அவர் பெயர் மீலா இவரும் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்களான திவ்யா, மீனா என்று மூன்று பேரும் நட்பாக பழகி வருகிறார்கள். இவர்கள் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

இவர்கள் சமீபத்தில் குமுளியில் ஒரு படப்பிடிப்புக்காக காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக திருச்சி பக்கத்தில் அவர்களுக்கு பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இவர்களின் காரில் மோதி உள்ளது இதனால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மீலாவுக்கு மட்டும் முதுகில் காயம் ஏற்பட்டது மற்ற இருவரும் தப்பித்துக் கொண்டார்கள்.
