விக்ராந்த் நடித்திருக்கும் ‘பக்ரீத்’ திரைவிமர்சனம்.!

0
bakrid
bakrid

ஒரு சராசரியான மனிதனுக்கும் ஒட்டகத்திற்க்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு தான் பக்ரீத், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வெற்றி பெற்றதா என விரிவாக காணலாம்.

தமிழ் மண்ணில் இன்னும் எத்தனையோ கதைகள் புதைந்து கிடக்கின்றன அவைகள் அனைத்தும் நம்மை சுற்றியே நடைபெறும் சம்பவங்கள் தான், நாம் அதை கவனித்து உண்மை தன்மையை வெளிக்கொண்டு வந்து சில திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள் இயக்குனர்கள்,சில திரைப்படங்கள் நமது மனதை லேசாக வருடி விட்டு செல்லும் அந்த வகையில் ஒரு வாழ்வியல் சார்ந்த திரைப்படம்தான் பக்ரீத்.

படத்தின் கதை

நமது கிராமத்தில் வீட்டில் இருக்கும் கால்நடைகளை தனது அண்ணன் தம்பி போல் சொந்தமாக்கிக் கொண்டு அதனை பராமரிக்கும் மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அதேபோல்தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகனும். படத்தின் கதாநாயகன் ஒரு விவசாயி இவர் சென்னையில் அருகில் உள்ள கிராமத்தில் இருக்கிறார்.

படத்தில் விக்ராந்தின் அடையாளம் ஒன்று கூட காண முடியாது ஏனென்றால் முழுக்க முழுக்க விவசாயியாக இருக்கிறார், விக்ராந்தின் நடிப்பை எவ்வளவு வேணாலும் பாராட்டலாம் அந்த அளவு முழுக்க முழுக்க தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் விக்ராந்திற்க்கும் அவரது அண்ணனுக்கும் சொத்துப் பிரச்சினை ஏற்படுகிறது அதனால் இருவரும் பேசிக் கொள்வதே இல்லை, நீதிமன்றத்தின் படி இருவருக்கும் நிலங்கள் பிரித்து கொடுக்கப்படுகிறது, விக்ராந்  தனக்கு கிடைத்த நிலத்தை வைத்து விவசாயம் செய்ய துடிக்கிறார், இதற்காக அதே ஊரில் இருக்கும் இஸ்லாமியரிடம் தனது நண்பன் மூலம் நிதியுதவி கேட்கிறார், பக்ரீத் பண்டிகை என்றாலே குர்பானி கொடுப்பது வழக்கம் தான் அதனால் ராஜஸ்தானிலிருந்து ஒரு பெரிய ஒட்டகம் ஒன்று கொண்டுவரப்படுகிறது.

அதனுடன் ஒரு குட்டியும் அழைத்து வருகிறார்கள், ஆனால் அந்த குட்டியை வெட்ட யாருக்கும் மனசு வரவில்லை அதை பராமரிக்க முடியாத சூழ்நிலை அதனால் அந்த குட்டி ஒட்டகத்தை விக்ரம் தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார் அதற்கு பெரும் சாரா என வைக்கிறார்.

அந்த குட்டி ஒட்டகத்தை விக்ராந்தின் மனைவிக்கும், மகளுக்கும் மிகவும் பிடித்துவிடுகிறது, அதனால் அதை தாங்களே பராமரித்து வருகிறார்கள், விக்ராந்த்  ஒரே பாடலில் விவசாயம் செழித்து பொருளாதார நிலை உயர்ந்து விடுகிறது, அதேபோல் அவர்களுடன் இருக்கும் குட்டி ஒட்டகமும் வளர்ந்து விடுகிறது.

ஒருநாள் சாராவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது அதனால் கால்நடை டாக்டர் ஒருவரை அணுகிறார்கள், அவரோ ஒட்டகம் இங்கே இருந்தால் வீணாக செத்துப் போய்விடும் என கூறுகிறார், அதனால் விக்ரம் கவலையடைந்து சாராவை ரஜஸ்தானில் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என முடிவு செய்கிறார்.

அதனால் ஒரு லாரியில் சாராவை ஏற்றிக் கொண்டு கூடவே செல்கிறார் ஆனால் எதிர்பாராத விதமாக பசு பாதுகாவலர்கள் இடம் சிக்குகிறார்கள் அதன்பிறகு விக்ராந்திடம் இருந்து சாரா பிரிக்கப்படுகிறது, அதன் பின் நடக்கும் உணர்வுபூர்வமான பாசப்பிணைப்பு நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்கள் தான் பக்ரீத்.

விலங்குகளை வைத்து படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல ஆனால் படாதபாடுபட்டு அதை சாத்தியமாக்கிய உள்ளார் இயக்குனர் ஜெகதீசன் அவருக்கு ஒரு பாராட்டுகள். படம் முழுக்க முழுக்க எமோஷன் நிறைந்த கதையாக அமைத்துள்ளார்கள், படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி பாசப் பிணைப்பில் நகர்கிறது, தமிழ்நாட்டு கிராமங்களின் அழகையும் வட மாநிலங்களின் வறட்சியும் மிகவும் அழகாக ஒளிப்பதிவாளர் காட்டியுள்ளார். படத்தில் விக்ராந்த் மட்டுமல்லாமல் அவருடன் நடித்த சிறுமி மற்றும் மனைவியாக நடித்த நடிகையும் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார்.

விலங்குகள் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதனால் இந்த திரைப்படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த திரைப் படமாக அமைந்துள்ளது.

பக்ரீத் : 2.5/5