பாக்கியா தங்கிருந்த ஹோட்டலுக்கு ரைடு வரும் போலீஸ்.. பதறிப்போன ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு

Baakiyalakashmi september 06
Baakiyalakashmi september 06

Bakkiyalakshmi : இன்றைய எபிசோடில் ஹோட்டல் தேடி பாக்யா, ஈஸ்வரி, இனியா, செல்வி நான்கு பேரும் காரில் அலைந்து கொண்டிருக்கின்றனர். அப்பொழுது பாக்கியா அங்கு ஒரு ஹோட்டல் இருக்கு போய் பார்க்கலாம் என்று சொல்கின்றனர். ஈஸ்வரியும் சரி போய் பாக்கலாம் வேற வழி இல்லையே என்று சொல்லி இறங்குகின்றனர்.

அந்த ஹோட்டல் வெளியே கட்டி முடிக்காமல் இருக்கிறது இருந்தாலும் உள்ள எப்படி இருக்கு என்று பார்க்கலாம் என செல்கின்றனர். அங்கு சிகரெட் அடித்துக் கொண்டு கொடூரமாக சிலர் பார்க்கின்றனர். இதை பார்த்து ஈஸ்வரிக்கு ரொம்ப பயமாகிறது. பிறகு ரிஷப்ஷனில் ரூம் இருக்கா என்று கேட்க, இருக்கு என்று சொல்வதும் இரண்டு ரூம் புக் பண்ணுகின்றனர்.

அப்பொழுது எழில் போன் பண்ணி அம்மா ரூமுக்கு போய்ட்டீங்களா என்று கேட்க, நீ புக் பண்ண ரூம் கேன்சல் ஆயிடுச்சு நானே வேற ஹோட்டல ரூம் பாத்துக்கிட்டேன் என்று சொல்கிறார். பிறகு ரூமில் போய் நான்கு பேரும் உட்காருகின்றனர். ரூம் நல்லா வசதியா இருக்கு அத்தை என்று பாக்யா ஈஸ்வரி இடம் கேட்க ஆம் பரவாயில்ல எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் பக்கத்து ரூமில் போய் தூங்க போறேன் என்று சொல்கிறார்.

அப்பொழுது யாரோ கதவை வேகமாக தட்டுகின்றனர். பாக்யா கதவைத் திறந்தது யார் என்று பார்த்தால் போலீஸ் வந்திருக்கின்றனர். போலீஸ் இவர்களிடம் நீங்க எங்கிருந்து வரீங்க யார் என்று கேட்க நான் பாக்கியலட்சுமி சென்னையில் இருந்து என் பொண்ணோட அசைன்மெண்டுக்காக வந்திருக்கோம் என்று சொல்கிறார் உடனே ஐடி ப்ரூப் காமிங்க என்று கேட்க பாக்யா காண்பிக்கிறார்.

பிறகு போலீஸ் கிளம்பி விடுகின்றனர். பிறகு ஈஸ்வரியும் செல்வியும் பக்கத்து ரூமுக்கு படுக்கத் போகின்றனர். அங்கு ஈஸ்வரிக்கு புது இடம் என்பதால் தூக்கம் வராமல் உட்கார்ந்து இருக்கிறார் அப்பொழுது கோபி போன் பண்ணுகிறார். கோபி என்னமா ரூம் எல்லாம் எப்படி இருக்கு என்று கேட்க எழில் புக் பண்ண ரூம் கேன்சல் ஆயிடுச்சு..

அதனால வேற ஒரு சின்ன ஹோட்டலுக்கு வந்திருக்கோம், இங்க இருக்கிறவங்களும் சரி இல்ல, போலீஸ் வரே இப்ப வந்தாங்க என நடந்தவற்றை கூற கோபி உடனே நான் கிளம்பி வரட்டுமா எனக்கு இங்க தூக்கமே வரல என்று சொல்கிறார் அதற்கு ஈஸ்வரி இந்த நைட்ல நீ வர வேணாம் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார் பிறகு ராதிகா நானும் மையூவும் எவ்வளவோ ஹோட்டல்ல தங்கியிருக்கோம்..

எந்த பிரச்சினையும் வந்ததில்லை எதுக்கு இவ்வளவு யோசிக்கிறீங்க பேசாம நீங்களும் போகணும்னா போங்க ஆனா திரும்பி வரக்கூடாது என்று விரட்டுவதால் கோபி ஒன்னும் சொல்லாமல் அமைதியாகி விடுகிறார். பிறகு இனியா பிரண்டு கூட ஃபோனில் பேசிக் கொண்டிருக்கிறது. பாக்யா வந்ததும் இனியா என் பிரண்டோட அப்பா அம்மா ரெண்டு பேரும் பிஸியா இருந்ததால..

அவளால ட்ரிப்புக்கு போக முடியல ஆனா நான் ரொம்ப லக்கி என்று சொல்கிறார், பிறகு திடீர்னு டிரைவர் ஓடிட்டாரு பாட்டியும் பயந்துட்டாங்க எப்படிமா நீ கார் ஓட்டிட்டு வந்த உனக்கு பயம் இல்லையா என்று கேட்க, பயம் இருந்தது ஆனா அதை விட உன் ட்ரிப் தான் முக்கியம் என்று தோணுச்சு என பாக்யா சொல்கிறார் இதோட இந்த எபிசோட் முடிந்துள்ளது.