தமிழ் திரையுலகின் மிகப் பிரமாண்டமான இயக்குனராக கொண்டாடப்படுபவர் தான் இயக்குனர் பாக்யராஜ் இவர் இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தவில்லை நடிகராகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அந்த வகையில் இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கி உள்ள பாக்கியராஜ் தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதை இயக்குனர் என்று பெயர் எடுத்துள்ளார் இவ்வாறு ஒரு கட்டத்தில் தான் இயக்கும் திரைப்படத்தில் தானே நடிக்க ஆரம்பித்துவிட்டார் இவ்வாறு அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் கொடுத்தது.
இதன் காரணமாக தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான நடிகரும் இயக்குனராக பெயரெடுத்த நமது நடிகருக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் திரண்டது மட்டுமல்லாமல் அவரை போலவே உடை அணியவும் ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டார்கள்.இந்நிலையில் தான் பிரபலமாக இருக்கும் பொழுது தன்னுடைய மகனை கரை சேர்த்து விட வேண்டும் என்ற காரணத்தினால் சித்து ப்ளஸ் டூ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு பாக்யராஜ் எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்கவில்லை பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இவ்வாறு இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருந்துள்ளார்கள்.
ஆனால் பாக்யராஜிக்கு பூர்ணிமா இரண்டாவது மனைவி என்பது பலருக்கும் தெரியாத விஷயம் தான் ஏனெனில் பாக்யராஜ் முதன்முதலாக நடிகை பிரவீணாவை தான் காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவர் கமல் நடிப்பில் வெளியான மன்மதலீலை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

அதுமட்டுமில்லாமல் ரஜினியின் பில்லா திரைப் படத்திலும் இவர் நடித்து உள்ளார்.பொதுவாக பாக்யராஜின் மனைவி பிரவீனா விற்கு சரியாக தமிழ் பேசவே வராதாம் ஆனால் அவருக்கு தமிழ் பேச கற்றுக் கொடுத்ததே பாக்யராஜ் தான். ஆரம்பத்தில் பாக்கியராஜ் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்தார் அப்பொழுது பிரவீனா தான் அவரை ஊருக்கு போக சொல்லி அனுப்பி வைத்தார்.

இப்படி ஒரு நிலையில் அவருக்கு அல்சர் ஏற்பட்டு விட்டது இதனால் சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்தார் அப்போது இவருக்கு பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது 16 வயதிலேயே என்ற திரைப்படம்தான்.
இவ்வாறு மீண்டும் பிரவீனாவை சந்தித்த நமது பாக்யராஜ் அவரைத் திருமணம் செய்துகொண்டார் ஆனால் பிரவீனா விற்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு தன்னுடைய 25 வயதிலேயே இயற்கை எய்திவிட்டார். அதன் பின்னர் பாக்யராஜ்-பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார் ஆனால் இன்றும் பிரவீனா ஞாபகமாக அவர் கொடுத்த மோதிரத்தை அணிந்து கொண்டு இருக்கிறார்.
