இளம் பெண்களை வேட்டையாடும் வெறி நாய்களை வெறித்தனமாக வேட்டை ஆடும் செல்வராகவனின் பகாசூரன் ட்ரைலர் விமர்சனம்..!

0
selvaragavan
selvaragavan

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் இவர் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் சாணி காயிதம் என்ற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் நடித்திருந்தார் அந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் தற்பொழுது பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை இயக்கிய மோகன் ஜி அவர்கள் இயக்கத்தில் தற்பொழுது செல்வராகவன் பகாசுரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார், மோகன் ஜி திரௌபதி திரைப்படத்தை தொடர்ந்து ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் தற்பொழுது செல்வராகவனை வைத்து பாயாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார் இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. நடராஜ் சுப்பிரமணியன், ராதாரவி, கே ராஜன், ராம்ஸ் சரவணன், சுப்பையா, மன்சூர் அலிகான், கூல் சுரேஷ்,  தேவதர்ஷினி, சசி லாயா, லாவண்யா,  குட்டி கோபி. என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் செல்வராகவன் தவறு செய்தவர்களை வேட்டையாடுகிறார். அதாவது காலேஜில் படிக்கும் சிறு பெண்களை தவறுதலாக பயன்படுத்துகிறார்கள் அதாவது ஒரு ஆப் பயன்படுத்தி பெண்களை தவறுதலாக பயன்படுத்தி வருகிறார்கள் ஒரு கும்பல் அதாவது வயதான  பலரும் பொண்டாட்டி வீட்டில் இல்லாத பொழுது இளம் பெண்களை கூட்டி வந்து தவறுதலாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இதனை கண்டறியும் அதிகாரியாக நட்டி நடராஜ் நடித்துள்ளார் இப்படி திடீரென ஒரு இளம் பெண் இறந்து விடுகிறார் அவர் எப்படி இருக்கிறார்  அதனை அவர்களிடம் பெற்றோரிடம் நட்டி நடராஜ் விசாரிக்கிறார் அப்பொழுது எல்லா உண்மைகளும் அவர்களுக்கு தெரிய வருகிறது. அவர்களது பெற்றோர் தனது மகள்  ரூமில் தான இருக்கிறார் அவர் படிக்கிறார் தூங்குகிறார் என நினைத்துக் கொண்டிருந்தோம் இப்படி செய்வார் என்று தெரியவே இல்லை என கதறி அழுகிறார்கள்.

இது அனைத்தும் ஒரு காலேஜ்ஜியின் மேற்பார்வையில் தான் நடக்கிறது என கண்டறிந்து விடுகிறார்கள் ஆனால் இதை அனைத்தையும் அந்த காலேஜ் முடி மறைக்கிறது இதையெல்லாம் பார்த்து பொறுக்க முடியாத செல்வ ராகவன் ஒவ்வொருத்தராக வதம் செய்து வருகிறார். கடைசியாக ஒரு பெண்ணிடம் செல்வராகவன் ஒழுக்கத்தை விட்டோம் நாசமா போயிடுவோம் என அறிவுரை கூறுகிறார் இத்துடன் இந்த ட்ரைலர் முடிகிறது.

ட்ரெய்லரே மிகவும் மிரட்டலாக இருப்பதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடைய இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.