முதன்முறையாக அண்ணன் தம்பிகளின் திரைப்படம் ஒரே நாளில் வெளிவந்து தற்பொழுது வசூல் வேட்டையில் வெற்றி நடைப் போட்டு வருகிறது. அதாவது தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாத்தி செல்வராகவன் ஹீரோவாக நடித்து கலக்கி உள்ள பகாசூரன் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகி உள்ள நிலையில் இந்த படங்கள் பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டியதை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.
பகாசூரன் படத்தினை இயக்குனர் மோகன் ஜி இயக்கி உள்ள நிலையில் இதில் ரசிகர்களுக்கு மிகவும் தைரியமாக நல்ல கருத்துக்களை கூறியுள்ளார். மேலும் தனுஷ் வாத்தி படத்தில் வாத்தியாராக நடித்திருக்கும் நிலையில் இவர்களுடைய படங்கள் தற்பொழுது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாத்தி படத்திற்காக தனுஷுக்கும், பகாசூரன் படத்திற்காக செல்வராகவன் இருவருக்கும் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
தனுஷின் வாத்தி படத்தில் தனியார் கல்வி தாளாளர்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த படத்தினை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி இருக்கும் நிலையில் பெரும்பாலான காட்சிகள் தெலுங்கு சினிமாவை போல இருப்பதாக கருத்துக்கள் கூறப்படுகிறது.
பொதுவாக தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் திரைப்படங்களை இயக்கும் பொழுது அவர்கள் தெலுங்கு திரைப்படத்தினை போலவே சிலவற்றை இயக்கி வருகிறார்கள் கடைசியாக வெளிவந்த வந்த விஜயின் வாரிசு படம் கூட அப்படி தான் இருந்தது. பெண் குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும் பொழுது பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டிய தகவல்கள் பல வகை இருக்கிறது.
எனவே அதனை எச்சரிக்கையுடன் சொல்லித்தர வேண்டும் என பகாசூரன் படத்தின் மூலம் இயக்குனர் மோகன் ஜி மிகவும் தைரியமாக சமூகத்திற்கு கூறியுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. எனவே ரசிகர்களின் கருத்துப்படி தனுஷின் வாத்தி படத்தை விட செல்வராகவனின் பகாசூரன் படம் நல்ல கருத்தினை கொண்ட படமாக இருப்பதாக கூறப்படுகிறது.