பிரம்மாண்ட ஹிட்டடித்த பாகுபலி திரைப்படத்தில் நடிக்க மறுத்த மிகப்பெரிய பிரபலங்கள்.! இதோ முழு தகவல். !

0
bahubali-tamil360newz
bahubali-tamil360newz

இந்திய சினிமாவிலேயே பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது, உலக அளவில் பாகுபலி திரைப்படம் 2 ஆயிரம் கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது.

பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை தெலுங்கு நடிகர்களை வைத்து திரைப்படத்தை இயக்குவதற்கு இயக்குனர் ராஜமவுலி முடிவு செய்யவில்லையாம். இந்த தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, பாகுபலி பிரமாண்ட கதை என்பதால் பிரமாண்ட திரைப்படமாக உருவாகும் என்பதால் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர்களை வைத்து உருவாக்க வேண்டும் என்பது தான் ராஜமௌலியின் திட்டமாம்.

அதனால் பாகுபலி திரைப்படத்தில் பாகுபலி கதாபாத்திரத்தில் முதலில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனை தான் அணுகினாராம், ஆனால் ரித்திக் ரோஷன் ஏற்கனவே ஜோத அக்பர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்ததால் இந்த திரைப்படத்தை நிராகரித்துள்ளார், அதன்பிறகு பல்வால் தேவனாக நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன்முதலில் இயக்குனர் ராஜமவுலி ஹிந்தி நடிகர் ஜான் அபிரகாம் தானை தான் அணுகினாராம்.

அதேபோல் படத்தில் முக்கிய கதாபாத்திரமான ராஜமாதா கதாபாத்திரத்தில் முதன்முதலில் இயக்குனர் ராஜமவுலி ஸ்ரீதேவியை தான் அணுகினார். ஆனால் அதிக சம்பளம் கேட்டதால் மேற்கொண்டு கதையில் அதிக தலையிட இருந்ததாலும் நிராகரித்துள்ளார்,.

அதேபோல் பாகுபலி திரைப்படத்தில் தமன்னா நடித்த கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தது ஹிந்தி நடிகை சோனம் கபூர் தான், அதேபோல் பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடிக்கவிருந்தது மோகன்லால் தான், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மோகன்லாலை ராஜமவுலி அணுகியுள்ளார். ஏனென்றால் இதற்கு முன் மோகன்லால் இதுபோல் கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக வந்திருந்தார்.

இப்படி பாகுபலி திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் முதன் முதலில் நடிக்க இருந்தது வேறு நடிகர்கள் என்ற செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.