பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? பல நாள் ரகசியத்தை உடைத்த கதாசிரியர்..

0
kattapa

2015 ஆம் ஆண்டு எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ், ராணா டகுபதி ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகி திரைபடம் பாகுபலி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது, பாகுபலி முதல் பாகத்தில் கட்டப்பா பாகுபலியை கொன்றது  ஏன் என்ற கேள்வியுடன் முடிந்திருக்கும்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், இந்த திரைப் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மனதில் பதியும்படி அமைந்திருந்தது. அதிலும் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் இன்றளவும் மிகப் பிரமாதமாக பேசப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவலை தற்போது ராஜமவுலியின் தந்தை கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார், அதாவது கட்டப்பா கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதற்கு சஞ்சய் தத்தை தான் அனுகியுள்ளர்கள், ஆனால் சஞ்சய் தத் சிறையில் இருந்ததால் அவரை வெளியே அழைத்து வர முயற்சி செய்ததாகவும் அதன் பிறகு அது சாத்தியமில்லை என்று தெரிந்த உடன் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சத்யராஜ் தேர்வு செய்தார்கள்.

இந்த உண்மையை பல நாள் கழித்து பாகுபலி திரைப்படத்தின் கதாசிரியர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார, சத்யராஜ் கட்டப்பா கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருப்பார், சஞ்சய்தத் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட இந்த அளவு அற்புதமாக வந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

சத்யராஜ் அருமையாக நடித்திருந்தார் பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் அவர்களே சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

bahubali-tamil360newz
bahubali-tamil360newz