சோத்துக்கே சிங்கி அடிக்கும் நிலையில் பாகவதரின் பேரன்..! பாகவதர் குடும்பத்திற்காக முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!

0

bagavathar family latest news: எம் கே தியாகராஜா பாகவதரின் பேரனுக்கு தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் நிலையில் தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு மனு கொடுத்துள்ளாராம் இதன் விளைவாக தற்போது அவருக்கு தகுந்த உதவி கிடைத்துள்ளது. தமிழ் திரை உலகில் பவளக்கொடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் 10 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ள நமது நடிகர் அதில் சுமார் ஆறு திரைப்படங்கள் மட்டும் மாபெரும் வெற்றியைப் பெற்று அவருக்கு பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது. அந்த வகையில் 1944 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஹரிதாஸ் என்ற திரைப்படமாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக திரையரங்கில் ஓடியது.

இது ஒரு பக்கம் இருக்க அன்றைய சென்னை என்ற மதராஸ் காலகட்டத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்ட லட்சுமிகாந்தன் என்ற  அவ்வழக்கில் பாகவதர் மற்றும் அவருடைய திரை உலகில் தோழராக வலம் வந்த என் எஸ் கிருஷ்ணன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை பெற்றார்கள்.

பின்னர் தண்டனைக்குப் பிறகாக அது விசாரணை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் குற்றமற்றவர்கள் தான் என நிரூபிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இவ்வாறு சிறையில் இருந்து வந்த பிறகு இவர் நடித்த எந்த ஒரு திரைப்படமும் சரியான வெற்றியை கொடுக்கவில்லை பின்னர் ஈரல் நோயால் தாக்கப்பட்டு தன்னுடைய இளம் வயதிலேயே இயற்கை எழுதிவிட்டார்.

bagavathar
bagavathar

இந்நிலையில் பாகவதரின் பேரன் முதலமைச்சர் முன்பு தனிப்பிரிவில் கோரிக்கை ஒன்று வைத்துள்ளார்கள்.  அதில் இவர் கூறியது என்னவென்றால் தான் வறுமையில் இருப்பதாகவும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கூட முடியாத அளவில் இருப்பதாகவும் மேலும் வாடகை கொடுக்க கூட பணம் இல்லாத இருப்பதாகவும் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அந்த வகையில் பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் ஒரு குறைந்த வாடகையில் வீடு  அமைத்துக் கொடுத்து 5 லட்சம் வரை நிதி உதவியும் அளித்துள்ளார்கள். இதன் காரணமாக என்னுடைய தாத்தாவை போல நாங்களும் பத்திரிகையாளர்களுக்கு மிக கடமைப்பட்டுள்ளோம் என்று தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்.

bagavathar
bagavathar