சீமான் பாடிய பாடலா அசுரன் பாட்டு.! அட நம்பவே முடியல.. அப்போ இவர் என்ன ஆனார்…

0
seeman
seeman

அசுரன் படத்தில் இடம்பெற்ற உள்ள இந்த எள்ளு வய பூக்களையே என்ற பாடலின் மெட்டு சீமானின் நாட்டுப் புறப் பாடலிலிருந்து தழுவியது தான் என்ற உண்மை தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் அவர்கள் நடிப்பில்  2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன்.

இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கியிருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வந்த நிலையில் இந்த படம் 67ஆவது தேசிய விருது பிரிவில் பல விருதுகளை குவித்தது.

இதனைத் தொடர்ந்து சீமான் அவர்கள் அசுரன் படத்தில் இடம் பெற்றுள்ள எள்ளு வாய பூக்களையே என்ற பாடலின் மெட்டு நான் பாடிய பாடலில் இருந்து என்று ஒரு மேடையில் கூறியது சினிமா வட்டாரத்தில் ஒரு பரபரப்பை கிளப்பி இருந்தது.

அதற்கு ஜி வி அவர்களும் வெற்றிமாறன் அவர்களும் கிரேட் என்று சொல்லி உள்ளார்கள் என்றும் ஒரு விமர்சகர் அவர்கள் கூறியிருந்தார். ஆனால் இது முற்றிலும் பொய் என ஒரு விமர்ச்சகர்’ கூறியிருந்த நிலையில் சீமான் கூறியது தான் உண்மை என்று ரசிகர்கள் தற்போது அந்த வீடியோக்களை வைரல் ஆக்கி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் பாடல் ஆசிரியர் அவர்களும் ஆமாம் சீமானின் நாட்டுப்புற பாடலில் இருந்து தழுவி எடுக்கப்பட்டது தான் எள்ளு வாய பூக்களையே பாடல். ஆனால் அந்தப் பாடல் எங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு தான் என்று அந்தப் பாடலாசிரியர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் பாடல் பிடித்து போய் அதிலிருந்து எடுக்கப்பட்டது தான் இந்தப் பாடல் என்றும் கூறியுள்ளார் அசுரன் படத்தின் பாடல் ஆசிரியர் யுகபாரதி.