திகிலில் மீண்டும் மிரட்ட வருகிறது டிமான்டி காலனி 2.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு !! ஹிரோ, ஹிரோயின் யார் தெரியுமா.?

2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் டிமான்டி காலனி இந்த திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்கள் இயக்கி இருந்தார் மேலும் கதாநாயகனாக அருள்நிதி அவர்கள் நடித்துள்ளார். வெறும் 2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியாகி 17 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதனை தொடர்ந்து பல பேட்டிகளில் அஜய் நாகமுத்துவிடம் டிமான்டி காலனி 2 எப்போது உருவாகும் என பல கேள்விகள் எழுந்திருக்கிறது. அதற்கு பதில் அளித்த அஜய் ஞானமுத்து விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன் பிறகு அதை யாருமே கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் தற்போது டிமாண்டி காலனி 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் டிமான்டி காலனி 2 படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பை இப்படத்தின் நாயகன் அருள்நிதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கும் நடிகையையும் இசையமைக்கும் இசையமைப்பாளரையும் குறிப்பிட்டுள்ளார்.

demonte colony 2
demonte colony 2

டிமான்டி காலனி 2 படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறாராம். மேலும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் அவர்கள் இசையமைக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

டிமான்டி காலனி முதல் பாகம் கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் ரசிகர்களை விறுவிறுப்பாக பார்க்க வைத்தது அதேபோல இரண்டாம் பாகமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அப்டேட் பட குழு விரைவில் வெளியிடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment