அம்மா மடியில் ஜம்முனு ஏறி உட்கார்ந்து இருக்கும் குழந்தை ஜாக்குலின்.! லைக்குகளை அள்ளும் புகைப்படங்கள்

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை சீசனாக நடைபெற்று வருகிறது அப்படி ஒரு சீசனில் ஜாக்குலின் தொகுப்பாளினியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதில் தனது சிறப்பான வரவேற்பு கொடுத்து மக்களிடையே நல்ல பெயரை பெற்றதோடு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அப்போதைய உருவாக்கத் தொடங்கினார்.அதன்பின் விஜய் டிவியில் இவர் தேன்மொழி எம்பிஏ என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வெற்றி நடை போட்டு வருகிறார்.

மேலும் முரட்டு சிங்கிள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது திறமையை நிரூபிக்க ரெடியாக இருக்கிறார் இப்படி தொட்டதெல்லாம் வெற்றி கண்ட இவர் வெள்ளித்திரையிலும் அதேபோலத்தான் கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து ரசிகர்களின் பாராட்டையும், புகழையும் சம்பாதித்தார்.

அதன் பிறகு ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தும் வந்தார். இப்படியிருக்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது வித்தியாசமான உடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் ட்ரெண்டிங்கில் வலம் வருது வழக்கம்

இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் தனது அம்மாவுடன் இளம் வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது லைக்குகளை அள்ளி வருகிறது.

Leave a Comment

Exit mobile version