பப்லு சட்டையை கழட்ட சொன்ன பாடிபில்டர்.! அனைவரையும் மிரள வைத்த தருணம்.! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நட்சத்திரமாகவும் வில்லன் நடிகராகவும் நடித்து வந்தவர் பப்லு இவர் 1971ஆம் ஆண்டு நான்கு சுவர்கள் என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார், அதன் பிறகு நீதி, அம்மா மனசு சிவா, நாளை நமதே, நான் வாழ வைப்பேன், என பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மேலும் இவர் நான் சிகப்பு மனிதன் என்ற திரைப்படத்தை மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு தெரியும் கதாபாத்திரத்தில் நடித்தார் அதனைத் தொடர்ந்து பல திரைப்படத்திலும் குணச்சித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஆகியோரின் திரைப்படத்தில்  குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

சினிமா உலகிற்கு வந்து பல வருடங்கள் ஆனாலும் இன்னும் கொஞ்சம் கூட தனது கெத்து குறையாமல் வாழ்ந்து வருகிறார் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள பப்லு தமிழ் திரைப்படமான மர்மதேசம், அரசு, வாணி ராணி, போன்ற பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது இவர் கண்ணான கண்ணே என்ற சன் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார் இந்த சீரியலில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

55 வயதை கடந்த பப்லு இன்னும் தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொண்டு இளமையாகவும் ஃபிட்டாகவும் இருக்கிறார். இந்த நிலையில் இவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் பப்லு பாடி பில்டர்கள் சுற்றி சூழ்ந்து கொண்டு நிற்கிறார்கள் உடனே பாப்லுவை இழுத்து சட்டையைக் கழட்டச் சொல்லி அவர்கள் கேட்டதும் முதலில் தயங்கிய பப்லு பிறகு சட்டையை கழற்றி தன்னுடைய சிக்ஸ் பேக்கை காண்பித்து பார்ப்பவர்களை அனைவரையும் அலற வைத்துள்ளார்.

மேலும் 1998 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகி அவள் வருவாளா என்ற திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பப்லுவின் தங்கை மற்றும் அஜித்தும் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். மேலும் அஜித் என்ற பையன் பப்லுவின் தங்கையிடம் வம்பு செய்வதாக கூறியுள்ளார் உடனே விசாரிக்க சென்ற போது அங்கே சென்று பார்த்ததும் நம்ம தல அஜித் இல்லை வேற ஒரு பையன் என தெரிந்ததாம். அதன் பிறகு அஜித் தான் அவரது தங்கைக்கு உதவி செய்ததாக கூறி இருந்தார்.

https://twitter.com/chettyrajubhai/status/1419554560356405253?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1419554560356405253%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.behindtalkies.com%2Factor-babloo-prithiveeraj-fitness-at-the-age-of-55%2F

Leave a Comment