எவ்வளவு நாள் தான் நானும் வில்லனாவே நடிக்குறது..! பிரபல இயக்குனர் கூட்டணியில் ஹீரோவாகும் பாபிசிம்ஹா..!

babi-simha
babi-simha

babi simha latest movie: தமிழ்மொழி மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் பாபி சிம்ஹா. இவர் தமிழில் முதன்முதலாக காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமானதைத்தொடர்ந்து பீட்சா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.

அதன் பிறகு பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா என்னும் திரைப்படத்தில் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்து இருப்பார் இவ்வாறு வெளிவந்த திரைப்படத்தின் மூலமாக நமது நடிகருக்கு தேசிய விருது கிடைத்தது.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்தின் பேட்டை திரைப்படத்தில் கூட பாபி சிம்ஹாவுக்கு ஒரு முக்கிய ரோல் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்திருப்பார். இந்நிலையில் பாபி சிம்ஹா கன்னடத்தில் முதல்முறையாக நடித்த 777 சார்லி என்ற திரைப்படத்தை தமிழில் வெளியிட முன் வந்துள்ளார்கள்.

இதனை பற்றிய அறிவிப்பை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடித்திருப்பார். இவ்வாறு உருவான திரைப்படமானது கன்னட திரைப்படமாக இருந்தாலும்  இத்திரைப்படத்தை தமிழ் தெலுங்கு ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட உள்ளார்களாம்.

மேலும் இந்த திரைப்படத்தின் மலையாள பதிப்பை நடிகர் பிரித்திவிராஜ் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திரையுலகில் வெளியிடப் போவதாகவும் கூறியுள்ளார்.

babi-simha
babi-simha