கோபியை போல் வேறொரு பெண்ணின் வலையில் சிக்கும் செழியன்.! ஜெனியின் நிலைமை இனி அவ்வளவுதானா.? இன்றைய முழு எபிசொட்

0
baakiyalakshmi-may-5
baakiyalakshmi-may-5

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலை காண இல்லத்தரசிகள் முதல் ரசிகர்கள் என அனைவரும் விரும்பி பார்க்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி யில் அதிக ரேட்டிங் பெற்ற சீரியல் பாக்கியலட்சுமி சீரியல் தான்.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் பெட்ரூமில் கோபி மற்றும் ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது கோபி உன்னோடு வாழ்வதே ரொம்ப போராட்டமா இருக்கு உனக்கு மட்டும் தான் கஷ்டமா எனக்கெல்லாம் கஷ்டம் இல்லையா அந்தப் பக்கம் திரும்பினாலும் திட்டுற இந்த பக்கம் திரும்பினாலும் திட்டுற உன் கூட எப்படி தான் வாழறது.

ஏதோ தெரியாத்தனமா குடிச்சிட்டேன் அதனால என் பையன் தான் இங்க கூட்டிட்டு வந்துட்டான், இன்னொரு அஞ்சு நிமிஷம் நீ லேட்டா வீட்டுக்கு வந்து இருந்தா நானே அங்கே வந்து இருப்பேன் இவங்களும் நிம்மதியா இருந்திருப்பாங்க, நானும் நிம்மதியாக இருந்திருப்பேன். இப்ப பாரு இங்க வந்துகிட்டு அவங்க மூஞ்சிலேயே என்னால முழிக்கவே முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு என கோபி கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு ராதிகா நான் உங்களுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வரலையா என கேட்க உடனே கோபியும் நான் உனக்காக என் வீட்டையே விட்டுட்டு வரலையா என கூறுகிறார்.

ஒரு கட்டத்தில் இதற்கு மேல் பேசினால் சண்டை தான் வரும் ஒழுங்கா நீயும் படுத்துக்கோ நானும் படுத்துகிறேன், என கூற எனக்கு தூக்கம் வரல என எழுந்து வெளியே செல்கிறார் ராதிகா. அடுத்த காட்சியில் பாக்கியா செல்வி இருவரும் சமையல் கட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது செல்வி இடம் சாரி செல்வி இன்னைக்கு ரொம்ப லேட் ஆயிடுச்சு நான் எழிலை கொண்டு விட சொல்லுகிறேன் எனக் கூற வேணாம் அக்காவுடைய புருஷன் வராரு என செல்வி கூறுகிறார். அது மட்டும் இல்லாமல் செல்வி உங்களுக்கு கஷ்டமா இல்லையா அக்கா உங்க வீட்டில் நடக்கிறது தான் புதுசா இருக்கு என கூற அதற்கு பாக்கியா என்னால என் வேலையவே செய்ய நேரம் இல்லை இதெல்லாம் யோசிக்க எனக்கு எப்படி டைம் இருக்கும் என சொல்லி சமாளிக்கிறார்.

அடுத்த காட்சியில் செல்வியை அனுப்பிவிட்டு திரும்புகிறார் அப்பொழுது ராதிகா மேலிருந்து வருகிறார் நேருக்கு நேராக ராதிகா மற்றும் பாக்கியா பார்த்துக் கொள்கிறார்கள் அடுத்த நாள் காலையில் கேண்டின் கிளம்புவதற்காக அனைவரும் பரபரப்பாக இருக்கிறார்கள். அப்பொழுது பாக்கியா மட்டும் ஜெனி பத்திரமா இரு என கூறிக் கொண்டே இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் அமிர்தாவும் இன்னைக்கு கேண்டின்குவாரா நிலா பாப்பாவ தாத்தா பார்த்துக் கொள்வார் என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பின்பு செழியன் கிளம்பும் நேரத்தில் ஈஸ்வரி நானும் வருகிறேன் கோவிலில் விட்டு கிளம்பி விடு என கூற அனைவரும் கிளம்பி விடுகிறார்கள். தாத்தா நிலா பாப்பா இருவரும் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது ஜெனி உங்களுக்கு பால் ஊத்தி எடுத்துக் கொண்டு வருகிறேன் என பாப்பாவுக்கு பால் எடுத்து வருகிறார். அப்பொழுது பாலை வாங்கும் நேரத்தில் பால் தவறி கீழே விழுகிறது நான் கடையில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என தாத்தா கிளம்பி விடுகிறார். ஜெனி ஃபோனை பார்த்து கொண்டு அந்த கீழே கொட்டிய பாலில் மீது காலை வைத்து விடுகிறார் அப்பொழுது வழிக்கி விழுந்து விடுகிறார். பாப்பாவுக்கு ஏதாவது ஆயிருக்குமா? என பதற்றத்துடன் இருக்கிறார்.

மற்றொரு பக்கம் செழியன் தன்னுடைய ஆபீஸில் ஒரே ப்ராஜெக்ட் ஒர்க் பண்ணும் தோழியை பார்க்க செல்கிறார் அப்பொழுது செழியன் தாமதமாக வந்ததால் சாரி கேட்கிறார் அதற்கு அந்தப் பெண் நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டதையே என்னால நம்ப முடியல இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டது என்ன மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் கஷ்டமா தான் இருக்கும் என ஒரேடியாக செழியன் தலையில் ஐஸ் வைக்கிறார். இதனால் செழியன் கொஞ்சம் கோபியை போல் வழிகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

கோபியை போல் செழியன் இந்த பெண்ணின் மீது ஆசைப்படுவாரா இல்லையா என்பதை இனி வரும் எபிசோடில் தெரியவரும்.