இதுதான் சரியான நேரம் கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன பாக்யா.! இதுக்கு பேர் தான் திருப்பி அடிக்கிறதோ..

Baakiyalakshmi : பாக்கியலட்சுமி சமீபத்திய எபிசோடில் பொருட்காட்சி கண்காட்சி நடக்கும் இடத்தில் சமைப்பதற்காக ஆர்டர் எடுக்கிறார் பாக்யா ஆனால் முதலில் கிடைக்காமல் போக பிறகு பழனிச்சாமியின் உதவியாளர் அந்த ஆர்டரை எப்படியாவது கைப்பற்றி விடுகிறார். இந்த ஆர்டரை எப்படியாவது வெற்றிகரமாக முடித்து அடுத்த ஆர்டரை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என பாக்கிய உறுதியாக இருக்கிறார்.

ஆனால் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்வதால் மழையும் பெரிது படுத்தாமல் பாக்கியா அனைத்து பொருளையும் வண்டியில் ஏற்றி பொருட்காட்சி நடக்கும் இடத்திற்கு அனுப்புகிறார் ஆனால் பாக்யாவின் மாமியார் ஈஸ்வரி இந்த மழையில இந்த ஆர்டர் பண்ணி தான் ஆகணுமா பேசாம வேண்டாம்னு சொல்லிவிடு என கூறுகிறார். ஆனால் அவர்கள் பேச்சைக் கேட்காமல் பாக்கிய கண்டிப்பா இந்த ஆர்டரை செய்துதான் முடிப்பேன் என கூறிவிடுகிறார்.

இடி மின்னலுடன் அதிக மழை பெய்ததால் பொருட்காட்சி நடக்காது என தொலைக்காட்சியில் அறிவித்து விடுகிறார்கள் இதனால் பாக்கியா இடிந்து போய் உட்காருகிறார். இந்த சமயத்தில் பழனிச்சாமி பாக்கியாவிற்கு ஆறுதல் கூறுவதற்காக வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் பாக்யாவின் முன்னாள் கணவர் கோபி வீட்டிற்கு வருகிறார்.

இவர்களைப் பார்த்து முகம் சுளிக்கிறார் அது மட்டும் இல்லாமல் வாய்க்கு வந்தபடி மிகவும் பச்சையாக பேச ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த பாக்யா கோபியை நீ யார் இதெல்லாம் கேட்க என பொங்கி எழுகிறார். அது மட்டும் இல்லாமல் என் லைஃப்ல எந்த ஒரு விஷயத்துலயும் நீங்க உள்ளே வரக்கூடாது என்பது போல் கூறுகிறார் அதற்கு வீட்டில் இப்படி ஒரு அசிங்கத்தை பார்த்துக் கொண்டு என்னால் இருக்க முடியாது என கோபி கூற.

அதற்கு பாக்கியா வீடா இது யாரோட வீடு என்னோட வீடு நீங்க பஸ்ட் வீட்டை விட்டு வெளியே போங்க என மூஞ்சில அடித்தது போல் கூறுகிறார் இதனால் கோபி மனம் உடைந்து நிற்கிறார் இதுதான் சரியான நேரம் என பாக்கியா கோபியை வெளியே போக சொல்வதால் இன்னும் பெரிய பூகம்பம் குடும்பத்தில் ஏற்பட போகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ அந்தப் ப்ரோமோ.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்