இதாண்டா நமக்கான நேரம் என நேரம் பார்த்து ராதிகாவை பழிவாங்கும் கோபி.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..

baakiyalakshmi-latest
baakiyalakshmi-latest

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது இந்த நிலையில் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி தன்னுடைய அம்மாவிற்கு பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளார். அதற்காக அனைவரையும் இன்வைட் செய்துள்ளார்.

ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் கிளாஸிலிருந்து சக நண்பர்கள் வந்துள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் பாக்கியா எப்பொழுது வருவார் என பழனிச்சாமி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். பழனிச்சாமி அம்மாவின் பிறந்தநாளுக்கு எழில், அமிர்தா, பாக்யா, ஈஸ்வரி, ராமமூர்த்தி இனியா என அனைவரும் வந்துள்ளார்கள். அப்பொழுது பழனிச்சாமி அனைவரையும் வரவேற்க அவருடைய அம்மாவிடம் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைக்கிறார் பழனிச்சாமி.

இனியாவை அறிமுகம் செய்யும்பொழுது இவர்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் நன்றாக படிப்பார் எனவும் கூறுகிறார். அதேபோல் எழிலை இவர்தான் மிகப்பெரிய ஃபிலிம் டைரக்டர் என அறிமுகம் செய்கிறார். இப்படி ஒவ்வொருத்தராக அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார். இது முடிந்ததும் கேக் வெட்ட ஆரம்பிக்கலாமா எனக்கேட்டு விட்டு கேக் வெட்ட ஆரம்பிக்கிறார்கள்.

கேக் வெட்டி முடித்ததும் அனைவரும் மறுபடியும் சோபாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது பழனிச்சாமியின் அம்மா இவனுக்கு ஒரு திருமணம் செய்து வைத்து விட்டால் எனக்கு நிம்மதியாக இருக்கும் என தன்னுடைய கோரிக்கையை கூறுகிறார் அதற்கு பாக்கியா அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு என கூறுகிறார். அந்த சமயத்தில் எழில் சொந்தக்காரப் பெண்ணை பார்த்துள்ளதை கூறுகிறார்.

அப்பொழுது ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இருவருமே எங்களுக்கு சொந்தக்கார பெண் இருப்பதையும் அவர்களிடம் பேசிஅழைத்து வருவதாகவும் கூறுகிறார்கள். பிறகு ஹாப்பி பர்த்டே சொல்லும் பொழுது யாரோ ஒருவர் இனிமையாக பாடினார்களே அது யார் என கேட்க உடனே எழில் அமிர்தா தான் நன்றாக பாடுவார் என கூறிவிடுகிறார்.

அதனால் ஒரு பாட்டு பாடு என பழனிச்சாமி கேட்க பாக்கியா குடும்பம் அனைவரும் பாடுபாடு என எழில் மனைவி அமிர்தாவிடம் கேட்கிறார்கள் அவரும் பாடுகிறார் அனைவரும் கைதட்டுகிறார்கள் பிறகு நாங்கள் கிளம்புகிறோம் என உத்தரவு வாங்கிக் கொண்டு பாக்கிய குடும்பம் கிளம்புகிறது அடுத்த காட்சியில் கோபி கட்டிலில் உட்கார்ந்து இருக்கும் பொழுது ராதிகா வந்து உட்காருகிறார்  தயக்கத்துடன் கோபியிடம் ராதிகா ஆரம்பிக்கிறார்.

கோபி எனக்கு ரொம்ப போர் அடிக்குது என கூற அதற்கு கோபி வா படம் பார்க்கலாம் இருவரும் சேர்ந்து என கூறுகிறார் இல்ல எனக்கு காலையிலிருந்து ரொம்பவும் போர் அடிக்குது என்கிட்ட யாருமே பேசறதே கிடையாது என கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் நம்ம வீட்டுக்கே போகலாமா என கேட்க கோபி அதிர்ச்சி அடைகிறார்.

இதான் நமக்கான நேரம் என ராதிகா கூறியதையே மறுபடியும் கோபி நினைவுக்கு கொண்டு வருகிறார். ஒரு அஞ்சு நிமிஷம் லேட்டா வந்திருந்தால் நானே அந்த வீட்டுக்கு வந்து இருப்பேன் ஆனா நான் இங்கதான் இருப்பேன்னு அடம் பிடித்து வந்த அதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா என கேட்க அதற்கு ராதிகா பழிக்கு பழி வாங்கறீங்களா அப்போ நான் தான் இங்க இருப்பேன்னு சொன்ன அதுக்காக இப்ப நீங்க வர முடியாதுன்னு சொல்றீங்களா என கேட்கிறார்.

அதுமட்டுமில்லாமல் கோபி உன்ன மருமகளா இந்த வீட்ல ஏத்துக்கணும் எல்லாரும் உன்ன மதிக்கணும் அப்படி இப்படின்னு ஒரு லட்சியத்தோடு தானே இங்க வந்தா இப்ப எதுவுமே நிறைவேறலையே அதுக்குள்ள போகணும்னு சொல்ற அதெல்லாம் நிறைவேறட்டும் அப்புறமா போகலாம் என்பது போல் கூறிவிடுகிறார். உடனே மைண்ட் வாய்ஸில் கோபி இவ கூப்டா நான் வரணும் இவ போனா போகணும் இங்கிருந்து போய்ட்டா அம்மா என்ன சும்மா விடுவாங்களா இனியாவிட்ட வேற ப்ராமிஸ் பண்ணி இருக்கேன் எக்ஸாம் முடியவே இல்ல அப்புறம் எப்படி இப்பவே போகிறது என தனக்கு தானே பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.