செத்துப் போனதாக நினைக்கும் கணேஷ் உயிருடன் வீட்டுக்கு வருகிறார்.. அமிர்தா எங்கம்மா இருக்கா.. பரபரப்பான பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு

Baakiyalakshmi september 07
Baakiyalakshmi september 07

Baakiyalakshmi september 07 :  இன்றைய எபிசோடில் இனியா பாக்கியாவிடம் எப்படி அம்மா உன்னால எல்லா நேரத்திலும் இவ்வளவு தைரியமாக இருக்க முடியுது என நடந்தவற்றை கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு பாக்கியா எனக்கு உன்னோட ட்ரிப் ரொம்ப முக்கியம் என்று தோணுச்சு, அதுமட்டுமில்லாமல் என்னால ஒன்னும் பண்ண முடியாதுன்னு..

உங்க அப்பா அப்பப்ப சொல்ற விஷயம் தான் என்னை எல்லாத்தையும் பண்ண வச்சது என்றும் சொல்கிறார். பிறகு பாக்கியா இங்க பக்கத்துல ஒரு காடு இருக்குது அங்க போனா இனியா அசைன்மென்ட்க்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் போகலாம் என்று சொல்கிறார். பிறகு ஈஸ்வரியிடம் அத்தை உங்களால் முடியவில்லை என்றால் நீங்க மட்டும் ரூம்ல இருங்க என்று சொல்ல..

நான் மட்டும் ரூமில் எப்படி தனியாக இருப்பேன் நானும் வரேன் என்று சொல்கிறார். அடுத்து பாக்கியா ராமமூர்த்திக்கு போன் பண்ணி எப்படி இருக்கீங்க, வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா செழியன் வீட்டுக்கு வந்தானா என்று கேட்க செழியன் வீட்டுக்கு வரவில்லை ஜெனி வீட்லயே இருக்கானா என்னவோ தெரியவில்லை என்று ராமமூர்த்தி சொல்கிறார்.

பிறகு நாங்க பக்கத்துல ஒரு காட்டுக்கு போறோம் போயிட்டு வந்து பேசுற மாமா என்று சொல்லிவிட்டு பாக்கியா போனை வச்சு விடுகிறார். அடுத்து அமிர்தா காலை டிபனுக்கு சர்க்கரை பொங்கல், வடை செஞ்சி இருக்கிறார் என்ன விசேஷம் என்று ராமமூர்த்தி கேட்க, எழில் இன்னைக்கு நிலாவோட அப்பா கணேசுக்கு நினைவு நாள் தான் எப்பவும் என்ன பண்ணுவீங்க என்று அமிர்தா கிட்ட கேட்டேன்.

இந்த மாதிரி சமைச்சு சாமிக்கு படைப்போம் என்று சொன்னதால் அதை நிறுத்த வேண்டாம் இங்கேயும் பண்ணிடு என்று அமிர்தா கிட்ட சொன்னேன் என்று சொல்கிறார். பிறகு ராமமூர்த்தி அமிர்தா உன்னை நம்பி வந்த பொண்ணு அவளுக்கு எந்த குறையும் இல்லாம நீ தான் பாத்துக்கணும் என அறிவுரை கூறுகிறார். அடுத்து கணேஷ் உடைய அப்பா அம்மா கணேஷ் நினைவு நாளுக்கு போட்டோவுக்கு மாலை போட்டு படைகள் போடுகின்றனர்.

இப்படி கடைசி காலத்துல பிள்ளைய நினைச்சு நம்ம தவிக்கிற மாதிரி பண்ணிட்டு போய்ட்டான் என ரொம்ப அழுதுகிட்டே படைக்கின்றனர் அப்பொழுது இறந்து போனதாக நினைத்துக் கொண்டிருக்கும் கணேஷ் நிஜத்தில் வந்து கதவைத் தட்டி அம்மா என கூப்பிடுகிறார். கணேஷை பார்த்ததும் அவங்க அப்பா அம்மா ஆச்சரியப்பட்டு நீ எப்படி கணேசா வந்தா என்று கேட்க..

நான் செத்துட்டேன்னு நினைச்சீங்களாமா நான் உயிரோட தான் இருக்கேன் என்று கணேஷ் பேசுகிறார் அவங்க அப்பா அம்மா கணேஷை பார்த்து சந்தோஷத்தில் அழுதுகின்றனர். பிறகு வீட்டின் உள்ளே வந்த கணேஷ் அமிர்தா எங்கம்மா என கேட்கிறார் அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் அவங்க அப்பா அம்மா முழிக்கின்றனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..