பாக்கியாவை இன்னும் லவ் பண்றீங்களா கோபி.! வில்லத்தனத்தை காட்டி எழிலிடம் வாங்கி கட்டிக்க போகும் ராதிகா.! பரபரப்பான எபிசொட்

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி சீரியல் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நேற்று நடந்ததை பேசிக் கொண்டிருக்கிறார்கள் ராமமூர்த்தி, ஈஸ்வரி, எழில் செழியன், பாக்யா என அனைவரும் அப்பொழுது பாக்கியாவை பார்த்து ஈஸ்வரி அவன் பேசிய எதையும் மனசுல நீ வச்சுக்காதம்மா என கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் ராமமூர்த்தி இது வீடா இல்ல பள்ளிக்கூடமா டெய்லி ஏதாவது ஒரு கம்ப்ளைன்ட் சொல்லிக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டு இருக்க நிம்மதியாக இருக்க முடியல என ராமமூர்த்தி புலம்பி கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அந்த சமயத்தில் பாக்கியா செழியனையே பார்த்துக் கொண்டிருக்கிறார் உடனே செழியன் என்னம்மா ஏம்மா இப்படி பார்க்கிற என கேட்க அம்மாவை ஏதாவது சொன்னா உனக்கு கோவம் வருமா என பாக்கியா கேட்கிறார் இது என்னமா ஒரு கேள்வி என் அம்மாவை பத்தி யார் என்ன சொன்னாலும் எனக்கு கோபம் தான் வரும் நீங்களும் அப்பாவும் சண்டை போட்டுக்கொள்வது வேற அதுல நான் தலையிடவே மாட்டேன் ஆனால் இப்ப உங்கள பத்தி தப்பா பேசினா எனக்கு கோவம் வராதா அம்மா என செழியன் கேட்கிறார்.

அதேபோல் எழிலும் என்னம்மா நீ பேசுற உன்ன பத்தி பேசும் போது நான் என்ன சும்மாவா இருக்க முடியும் அவர கையை ஓங்குனது பத்தாது அடிச்சிருக்கணும் என எழில் கூற உடனே செழியன் எனக்கும் தோணுச்சு ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுத்துருச்சு என  கூறிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் ஈஸ்வரி அவனை அடித்த பாவம் உங்களுக்கு எதுக்கு அவன் ஏன் கிறுக்கன் மாதிரி பேசுறானே தெரியல என ஈஸ்வரி கூறுகிறார்.

அடுத்த காட்சியில் ராதிகா கோபியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது நீங்க நெஜமாலுமே எனக்காக தான் சண்டை போட்டீங்களா இல்ல பாக்யா மேல இருக்கிற பொசசிவ்னஸ் லவ்வுல கேட்க போனீங்களா என ராதிகா கோபியை  கேட்கிறார். அவதான் டிவோஸ் பண்ணிட்டாலே இன்னும் அவளுடைய நினைப்பு உங்களை விட்டு போகலையா இன்னும் அந்த கேரிங் லவ்வெல்லாம் இன்னும் இருக்கா என ராதிகா கோபியை பார்த்து கேட்கிறார் அதெல்லாம் இல்ல ராதிகா உனக்காக தான் நான் கீழே போய் சண்டை போட்டேன் என கூற என்னோட ஆசை மகன் செழியன் இன்னைக்கு என்ன அடிக்க கை ஓங்கிட்டானே என கூறி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார் கோபி.

மேலும் ராதிகா நான் வந்த ஒரு வாரத்திலேயே பாக்கியவா தான் எல்லாம் மெச்சிக்கிறாங்க உங்களை ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டேங்குறாங்கன்னு எனக்கு தெரியுது ஆனா உங்களுக்கு இன்னும் புரியலையா கோபி என இன்னும் கோபியை ஏற்றி விடுகிறார். அடுத்த காட்சியில் செழியன் ஜெனி இருவரும் ரூமில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் நிஜமாலுமே நீ தானா செழியா இப்படி எல்லாம் சண்டை போட்டது முன்னாடி எல்லாம் வீட்ல என்ன நடந்தாலும் கண்டுக்க மாட்ட இப்பல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்ட எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என ஜெனி கூறிக் கொண்டிருக்கிறார். அப்பா இன்னைக்கு ரொம்ப டூ மச்சா பேசிட்டாரு என்னாலேயே இதெல்லாம் தாங்கிக்க முடியல என பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் செழியனின் ப்ராஜெக்ட் மேனேஜர் கால் செய்கிறார் ஆனால் செழியன் எங்க நாம் பேசுவது தெரிந்து விடுமோ என பயந்து கொண்டு பேசுகிறார் ப்ராஜெக்ட் பிரசன்டேஷனில் ஏதாவது சந்தேகமா எனக் கேட்க இல்லை உங்களிடம் பேச வேண்டும் என அந்த பெண் செழியனை விடாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த காட்சியில் சமையல் கட்டில் பாக்கியா செல்வி எழில் மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது செல்வி கதை கூறிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் ராதிகா பால் பாக்கெட் உடைத்து சுட வைத்துக் கொண்டிருக்கும் பொழுதே நீங்கள் நேற்று நடந்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை என நக்கலாக கேட்கிறார் எழில் இதனை பார்த்துக் கொண்டே இருக்கிறார் ராதிகா ஏதோ வம்பு வளர்த்த போகிறார் அதனால் எழில் கோபப்பட்டு கத்த போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.