ராமமூர்த்தி எடுத்த அதிரடி முடிவு ஆடிப்போன ஈஸ்வரி, பாக்கியா, எழில்.! உச்சகட்ட கோபத்தில் கோபி.. பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட்.

0
baakiyalakshmi-serial
baakiyalakshmi-serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் ஆகி உள்ளன அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக கோபி நடித்துள்ளார் இவர் இரண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார் முதலில் பாக்கியாவை திருமணம் செய்து கொண்டார் பின்பு ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்பொழுது பாக்யாவை விட்டு விலகி கோபி ராதிகாவுடன் குடும்பத்தை நடத்தி வருகிறார் அவருடன் எழில் மற்றும் ராமமூர்த்தி தாத்தா இருவரும் இருக்கிறார்கள். இதன் நிலையில் கோபி திடீரென வீட்டை விற்கப் போவதாக பாக்யா வீட்டில் கூறிவிட்டு வந்து விடுகிறார் அதனால் எழில் நான் இந்த வீட்டை வாங்கியே தீர்வேன் என சபதம் செய்கிறார் கோபியிடம் இனியா இருக்கும் பொழுது  எழில் தன்னுடைய கதையை விற்கப் போவதாக தாத்தா கோபியிடம் கூறுகிறார்.

இதனை கேள்விப்பட்ட இனியா அதிர்ச்சி அடைகிறார் உடனே எழிலை பார்க்க பாக்யா வீட்டிற்கு வெளியே நிற்கிறார் அங்கிருந்து வந்த எழில் இனியவை பார்த்து லட்டு நில்லு நான் வரேன் என கூறிவிட்டு கீழே இறங்கி வருகிறார். எழிலை பார்த்த இனியா கண்ணீரில் மிதக்கிறார் அது மட்டும் இல்லாமல் நீங்க கஷ்டப்படுறது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என கூறுகிறார் இனியா. இதெல்லாம் ஒரு கஷ்டமா நீ உன் வேலைய பாரு அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என எழில்  இனியாவிற்கு ஆறுதல் கூறுகிறார்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறது ராமமூர்த்தி பார்த்து கொண்டிருக்கிறார் உடனே ராமமூர்த்தி பாக்யா வீட்டிற்கு வந்து  ஈஸ்வரி எழில் பாக்யா முன்னிலையில் நான் ஒரு முடிவு எடுத்து விட்டேன் இதை காது கொடுத்து கேட்டுக் கொள்ளுங்கள் எதுவும் பேசக்கூடாது என ஒரு அதிர்ச்சி தகவலை கூறுகிறார் அதாவது  ஊரில் இருக்கும் சொத்தை விற்பதற்கு ராமமூர்த்தி முடிவு செய்கிறார் விற்றால் தான் வீட்டை வாங்க முடியும் என முடிவு செய்து வீட்டை விற்பதற்கு பாக்கியவை அழைக்கிறார்.

ஆனால் எழில் வேண்டாம் தாத்தா என்னால் சமாளிக்க முடியாது என நினைக்கிறாயா? நான் கண்டிப்பாக இதை சரி செய்வேன் என கூறுகிறார் ஆனால் ராமமூர்த்தி நீ ஏன் கஷ்டப்படணும் நான் தருதலையை பெற்று விட்டேன் அதுக்கு பரிகாரம் நான் தான் தேடி ஆக வேண்டும் என ராமமூர்த்தி பிடிவாதமாக பாக்யாவை அழைத்துக் கொண்டு சொந்த ஊரில் இருக்கும் நிலத்தை விற்க கிளம்பி விடுகிறார் உடனே ஈஸ்வரி கோபியை அழைத்துள்ளார்.

இனியாவும் கோபியும் பாக்யா வீட்டிற்கு வருகிறார் உடனே ஈஸ்வரி கோபமாக கோபி இடம் பேச கோபியோ எனக்குப் பிறகு என் பிள்ளைகள் தான் அனைத்தையும் அனுபவிக்கப் போகிறார்கள் இந்த வீட்டை விற்றாலும் என் பிள்ளைகளுக்கு தான் பணத்தை கொடுக்கப் போகிறேன் எனை கூறி ஈஸ்வரியின் மனதை மாற்ற பார்க்கிறார். இதை அனைத்தும் கேட்டுக் கொண்டிருக்கும் ஈஸ்வரி கொஞ்சம் கோபியின் மீது   கருணை காட்டுகிறார்.

ஆனால் கோபி திட்டவட்டமாக இந்த வீட்டை பாக்யாவை வாங்கவிடவே மாட்டேன் அவருக்கு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது இந்த வீட்டில் பாக்யா இருக்கவே கூடாது என திட்டவட்டமாக கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் ஈஸ்வரிடம் நீங்கள் கேளுங்கள் அம்மா நான் உங்க பேருக்கே இந்த வீட்டை எழுதி கொடுக்கிறேன். ஆனால் பாக்யாவிற்கு மட்டும் தலைகீழ நின்றாலும் எழுதிக் கொடுக்க மாட்டேன் என சபதம் செய்கிறார்.

ஏற்கனவே என்னுடைய வீட்டில் அப்பாவும் இனியாகவும் இருக்கிறார்கள் நீங்களும் வந்து விடுங்கள் செழியனுக்கு வேற பிளாட் வாங்கி தருவதற்கு நான் ஹெல்ப் செய்யப் போகிறேன் பாக்கியாவும் எழிலும் எப்படி போனாலும் எனக்கு கவலை இல்லை என கோபி கூறியதும் ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

இதை அனைத்தையும் கூறிவிட்டு கோபி இனியா இருவரும் வெளியே செல்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.