கோபியின் மீதுதான் தப்பு இருக்கிறது என்று கூறும் கோபியின் அம்மா.! கவலையில் பாக்கியா..

0
baakiya lakshmi 21
baakiya lakshmi 21

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் குடும்பத் தலைவி எவ்வளவு போராட்டங்களை கடந்து வருகிறார் என்பதை மையப்படுத்தி காட்டுவதால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது வந்தது. மேலும் டிஆர்பி-யில் டாப் சீரியலாக இடம்பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து ரசிகர்கள் பாக்கியலட்சுமி சீரியலுக்கு நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து சில வாரங்களாக மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டு வருகிறது. ரசிகர்கள் அடுத்து என்ன ஆகும் என்று எதிர்பார்த்துக் கொண்டே வருகிறார்கள். இதில் கோபி சிக்குவாரா என்ற நிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட மாட்டிக்கொண்ட கோபி சமாளித்து வருகிறார். மெகா சங்கமாக இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கோபி பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொண்டு வருத்தப்படுகிறார்கள்.

இதனைப்பற்றி கோபியிடம் கேட்ட மூர்த்தி அதற்கு கோபி வேகமாக எல்லோருக்கும் கேட்கும்படி ஆக்ரோஷமாக பேசிவருகிறார். இதைக்கேட்ட குடும்பத்தில் உள்ள அனைவரும் என்ன பிரச்சினை என்று கேட்கும்போது கோபி மழுப்பி பேசுகிறார். இதிலே எல்லோருக்கும் ஒரு டவுட் ஏற்பட்டது ஆனால் எழிலுக்கு நன்றாகவே புரிந்தது. இதைப்பற்றி யோசித்துக்கொண்டே இருக்கும் பாக்கியா.

இந்நிலையில் பாக்கியாவும் கோபியும் அம்மாவும் கோபி எதோ தவறு செய்து வருகிறார் மூர்த்தி மேல் எந்த தவறும் இருக்க வாய்ப்பு இல்லை என்று பேசிக்கொண்டிருக்கும் போது கோபி வேலைக்கு செல்லும்போது கோபியை அழைத்து கோபியிடம் மூர்த்தி கிட்ட நடந்ததைப் பற்றி கோபியின் அம்மா கேட்கிறார். ஆனால் அதற்கு கோபி பதட்டத்துடன் என்ன சொல்வது என்று தெரியாமல் பேசி அந்த இடத்தை விட்டு சென்று விட்டார் கோபியின் அம்மாவுக்கு சரியாக படவில்லை என்று கூறுகிறார்.

இதைப் பற்றியே நினைத்துக் கொண்ட பாக்கியா விடம் வேலை செய்துவரும் செல்வி அறிவுரை கூறி வருகிறார். இதையெல்லாம் புரிந்து கொள்ளாத பாக்கியா எழில் பல கேள்விகளைக் கேட்டு வருகிறார். இதையெல்லாம் என்னால் தாங்க முடியாது என்று பாக்கிய கவலை அடைகிறார். ஆனால் கோபி ராதிகாவிடம் நல்லா மாட்டிக் கொண்டார் இதனையடுத்து பாக்கியாவிடம் எப்போது மாற்றிக்கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்