விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் பாக்கியா ஆங்கிலம் கற்றுக் கொள்ள சென்றுள்ளார் அங்கு அனைவரும் அமர்ந்துள்ளது போல் அவரும் அமர்ந்துள்ளார். அப்பொழுது அனைவரும் ஹோம் ஒர்க் முடித்து விட்டீர்களா என கேட்க முடித்து விட்டோம் என கூறுவார்கள் ஆனால் பாக்யா தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார் எதையும் காtதில் வாங்காமல் உட்கார்ந்து இருக்கும் பாக்யாவிடம் கிளாஸ் எடுக்கும் டீச்சர் கேட்கிறார்கள்.
ஹோம் ஒர்க் முடிக்க முடியவில்லை நாளை கண்டிப்பாக முடித்து விடுகிறேன் என பாக்யாவும் பதில் கூறுகிறார். உடனே பாக்யாவிடம் பழனிச்சாமி மற்றும் அவருடைய தோழியும் உனக்கு என்ன ஆச்சு ஏன் இவ்வளவு சோகமா உட்கார்ந்து இருக்க உன் முகத்தில் ஆயிரம் பிரச்சனை இருப்பது தெரியுது உனக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் உன்னுடன் இருப்பவர்களுடன் ஷேர் செய்து கொள் அப்பதான் உனக்கு உள்ள பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என பழனிச்சாமி எவ்வளவோ எடுத்து கூறுகிறார் பாக்யாவிடம்.
அடுத்த காட்சியில் ஈஸ்வரி, ஜெனி, அமிர்தா என அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது ராதிகா திடீரென அடுப்பங்கரைக்கு வந்து செல்வி கழுவி வைத்த பாத்திரத்தை வெடுக்கென எடுக்கிறார். அதற்கு செல்வி வெடுகென்ன பிடுங்கி நா கழுவி வச்ச பாத்திரத்தை எதுக்கு எடுக்குறீங்க என கேட்க உடனே முறைத்து விட்டு ராதிகா காபி போட பாலை உடைத்து ஊத்துகிறார் அதன் பிறகு ஈஸ்வரி, செல்வி என கூற உடனே ராதிகா எடுத்த காபித்தூளை உடனே வெடுக்கென பிடுங்கி செல்கிறார்.
அதன் பிறகு சக்கரை எங்கே இருக்கு என கேட்க செல்வி கடையில இருக்கு என சொல்கிறார் அதற்கு ராதிகா பாத்திரத்தை போட்டு உடைக்கிறார். உடனே ஈஸ்வரி யார் அடுப்புங்கரைல வந்து யாரு அதிகாரம் பண்ணுறது என ராதிகாவை ஈஸ்வரி திட்டுகிறார், அது மட்டும் இல்லாமல் ஈஸ்வரி கோபிக்கு இன்ஸ்டன்ட் காபித்தூளே பிடிக்காது என்னத்த வாழ்ந்தாலோ இவ்வளவு நாளு இதை கூட புரிஞ்சுக்கல என திட்டி விட்டு சாப்பிடாமல் சென்று விடுகிறார்.
பின்பு இன்ஸ்டன்ட் காபித்தூளை போட்டு காபி போட்டு எடுத்துக் கொண்டு கோபிக்கு கொடுக்கிறார் அதை கோபி குடித்து பார்த்துவிட்டு கண்றாவியாக இருப்பதை மூஞ்சியில் 300 ரியாக்ஷனை காமிக்கிறார். இதெல்லாம் ஒரு காபியா என சொல்லாமல் ரியாக்ஷனை காமிக்கிறார் ஆனால் ராதிகாவிடம் காபி சூப்பர் அருமை என புகழ்ந்து தள்ளுகிறார்.
அடுத்த காட்சியில் பாக்கியா ஆங்கில வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது கிளாஸ் முடிந்ததும் வீட்டுக்கு போகவே எனக்கு பிடிக்கல என பாக்கியா பழனிச்சாமிடம் கூறிக் கொண்டிருக்கிறார் அதற்கு பழனிச்சாமி மற்றும் அவருடைய தோழியிடம் அனைத்து உண்மைகளையும் வீட்டில் நடந்ததை கூறிவிடுகிறார். இதனால் பாக்யா வீட்டிற்கு போகவே பிடிக்கவில்லை என கூறும் பொழுது பழனிச்சாமி உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது உங்களை நம்பி தான் உங்க பிள்ளைங்க இருக்காங்க அவங்க சந்தோஷத்துக்காக நீங்க வீட்டுக்கு தான் போகணும் என அட்வைஸ் பண்ணி அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.