இறந்து போன அமிர்தாவின் முன்னாள் கணவர் மீண்டும் உயிருடன் வந்தார்.. எழிலுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – பாக்கியலட்சுமி பரபரப்பான ப்ரோமோ

Baakiyalakshmi
Baakiyalakshmi

Baakiyalakshmi : இல்லத்தரசிகள் பொழுதுபோக்கிற்காக சின்னத்திரையில் பல சீரியல்களை ஓடும் காலம் கடந்து ஓடிக்கொண்டு இருகின்றனர். அதில் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் டாப் லிஸ்ட்டில் இருக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இது விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகின்றன.

இதில் பாக்கியலட்சுமி என்ற ஒரு இல்லத்தரசி பெண் தன் குடும்பத்திற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார் எவ்வளவு பிரச்சினையை சந்திக்கிறார் என்றவற்றை முக்கியமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் நடித்து வரும் பாக்யா, கோபி, எழில், செழியன், அமிர்தா, ஜெனி, இனியா போன்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம்.

தற்போது பாக்கியலட்சுமி தொடரில் காலேஜ் அசைன்மென்ட்க்காக  இனியா, பாக்யா, செல்வி, ஈஸ்வரி நான்கு பேரும் கேரளா ட்ரிப்புக்கு காரில் சென்று கொண்டிருக்கின்றனர் இன்னொரு பக்கம் எழிலும் அமிர்தாவும் நிலாவை பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்கின்றனர். அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷுக்கு நினைவு நாள் வர இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் கணேஷ் நினைவு நாளில் அவங்க அம்மா அப்பா கணேஷ் உடைய புகைப்படத்திற்கு மாலை போட்டு படையல் போடுகின்றனர். அப்பொழுது இறந்ததாக கூறப்பட்ட கணேஷ் உண்மையிலே அவங்க வீட்டுக்கு வந்து கதவை தட்டி அம்மா அப்பா என்று கூப்பிடுகிறார்.

கணேசை பார்த்ததும் அவங்க அப்பா அம்மா சந்தோஷத்தில் அழுது புகைப்படத்தில் இருக்கும் மாலையை பிச்சு கடாசுகின்றனர் பிறகு கணேஷ் அமிர்தா இங்கே என்று கேட்க அவங்க அப்பா அம்மா என்ன சொல்வது என்று தெரியாமல் திணறிப் போய் நிற்கும்படியான புரோமோ வெளியாகியிருக்கின்றன.