இவ்வளவு மோசமானவரா கோபி.. கோபியின் அதிரடி முடிவால் நிலைகுலைந்த பாக்யா..!

0
gobi 2
gobi 2

கோபி பாக்கியலட்சுமி வீட்டிற்கு சென்று தான் வாங்கிய வீட்டை விற்கப் போவதாகவும் அப்படி நீங்கள் வாங்க விரும்பினால் இன்றைய மார்க்கெட் ரேட் என்னவோ அதனை கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என பாக்யா மற்றும் எழிலை பார்த்து மிரட்டுகிறார் கோபி. அந்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் மிகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் கோபிக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவி பாக்கியா இரண்டாவது மனைவி ராதிகா. முதல் மனைவி பாக்யாவுக்கு மூன்று பிள்ளைகள் மூன்று பிள்ளைகள் இருந்த நிலையில் விவாகரத்து செய்துவிட்டு கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார்.

கோபியை பாக்கியலட்சுமி இனிமேல் வீட்டுக்கு வரக்கூடாது என அடித்து விரட்டி விடுகிறார் அதுமட்டுமில்லாமல் வீடு கட்ட ஆன 40 லட்ச ரூபாயை திருப்பி கொடுத்து விடுவேன் என கோபியிடம் சவாலும் விட்டுள்ளார். ஆனால் பாக்யாவால் அத்தகைய தொகையை திருப்பித் தர முடியவில்லை திருமண ஆடர்களை வைத்து இரண்டு தவணைகள் மட்டுமே கொடுத்தார் மூன்றாவது தவணை கொடுக்க முடியவில்லை அதேபோல் கேட்டரிங் ஆர்டரை நம்பி இருந்த பாக்யா ராதிகாவின் சதியால் அந்த  ஆர்டரும் கிடைக்கவில்லை.

அதனால் தற்பொழுது மிகவும் வருமானத்திற்கு திண்டாடி வருகிறார் பாக்யா இந்த நிலையில் பாக்கியாவின் மருமகள் ஜெனி பாக்யாவின் தோற்றத்தை மாற்ற சொல்லி அவரை பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்று அவரின் தோற்றத்தை மாற்றியுள்ளார் இதற்கு இடையில் பாக்யா வீட்டில் இருக்கும் கோபியின் பெயரை மாற்றி விட்டு எழில் பாக்யாவின் பெயரை பலகையில் பதிவிட்டு மாட்டி வைக்கிறார் இதை பார்த்த கோபி பாக்யாவிடம் கடுமையாக சண்டை போடுகிறார்.

வீடு இன்னும் என்னுடைய பெயர்ரில் தான் இருப்பதாகவும் 40 லட்சம் போட்டு வீட்டை கட்டி உள்ளேன் நீ இரண்டு தவணை மட்டும் தான் கட்டினாய் மூன்றாவது தவணை கட்டவில்லை என கடுமையாக சண்டை போடுகிறார் கோபி. தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தான் வீட்டை தானே விற்க போவது ஆகவும் அதை நீங்கள் வாங்கிக் கொள்ள விரும்பினால் இன்றைய மார்க்கெட் ரேட் என்னவோ அதை கொடுத்து வாங்கி கொள்ள வேண்டும் எனவும் பாக்கியாவையும் எழிலையும் மிரட்டுகிறார் கோபி.

இதனால் நிலைகுலைந்து நிற்கிறார் பாக்யா அந்த புரோமோ தற்பொழுது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.