கோபியின் ஃபோனை தூக்கி போட்டு உடைத்த ராதிகா.! எரிமலையாக வெடித்த கோபி இதெல்லாம் உனக்கு தேவைதான்.! பரபரப்பாகும் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி எபிசோடில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒவ்வொரு நாளும் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ராதிகா தூங்குவது போல் படுத்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் கோபி போனை எடுத்து இனியா பேசியதை கேட்டுக் கொண்டிருக்கிறார் இதை சட்டென எழுந்து ராதிகா பார்த்து விடுகிறார்.

லைட்டை போட்டு பார்த்த கோபி பயந்து போய் பேய் என கத்துகிறார். அதன் பிறகு ராதிகா என்ன பண்ணிட்டு இருக்க கோபி என்ன கேட்க நான் இனியா என் பொண்ணு பேசினது தான் பாத்துட்டு இருக்கேன் கொஞ்ச நேரம் பாத்துட்டு தூங்கிறேன் என கூறுகிறார். ஆனால் ராதிகா போனை புடுங்கி தூக்கி வீசுகிறார் அப்பொழுது ஃபோன் சுக்குநூறாக உடைந்து விடுகிறது. இதனால் கோபப்பட்ட கோபி என்ன செஞ்சுகிட்டு இருக்க ராதிகா என போனை எடுத்து பார்க்கிறார் போன் உடைந்து சுக்கு நூறாக கிடைக்கிறது.

என்னையும் மயூவையும் விட்டுட்டு பொய் சொல்லிட்டு தான் போனீங்க என மீண்டும் வாக்குவாதம் செய்கிறார் ராதிகா, சொல்லிட்டு போனா மட்டும் நீ என்ன விட்டுட போறியா அதுக்கும் சண்டைதானே போடுவ என கோபி கூறுகிறார். என் பொன்னும் எனக்கும் இடையில் நீ யாரு கேட்க அந்த உரிமை உனக்கு இல்லை என கூறிவிடுகிறார் கோபி. அடுத்த நாள் அதிகாலையில் இனியா படித்துக் கொண்டிருக்கிறார் அவரிடம் சென்று கோபி படிக்கிறியா இனியா பாப்பா  படி என கூறிவிட்டு உனக்கு நான் காபி போட்டு எடுத்துக் கொண்டு வரவா என கேட்கிறார் வேண்டாம் என இனிய கூற அதெல்லாம் முடியாது நீ காபி குடிச்சிட்டு தெம்பா படிக்கணும் என காபி போட சொல்கிறார்.

பாக்யா மற்றும் செல்வி சமையல் கட்டில் இருக்க அவர்களை எக்ஸ்க்யூஸ் மீ எனக் கூறிவிட்டு கோபி காபி போட்டு எடுத்துக் கொண்டு இனியாவிடம் கொடுக்கிறார். இனியா எனக்கு காபி பிடிக்காது டாடி பால் தான் பிடிக்கும் என கூற நான் போய் பால் போட்டு எடுத்து வரேன் என சொல்கிறார் ஆனால் வேணாம் பரவால்ல டாடி நானே குடிக்கிறேன் என காபி குடிக்கிறார் பிறகு இனியாவிற்கு கணக்கு சொல்லிக் கொடுக்கிறார்.

இதை பார்த்துக் கொண்டே போகிறார் ராதிகா. அடுத்த காட்சியில் இனியா ஈஸ்வரி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நீ கோபியை கெட்டியா பிடிச்சுக்கோ அவன் மீது பாசத்தைக் காட்டு அவனுக்கு நீ தான் உயிர் என ஈஸ்வரி கூற உடனே பாக்கியாவும்  நீ படிக்கிறதுல மட்டும்தான் உன் கவனம் இருக்கணும் படிக்கறது மட்டும் பாரு என கூறுகிறார்.

அடுத்த காட்சியில் கோபி ஆபிசுக்கு கிளம்ப பைலை எடுத்துக் கொண்டு வைக்கிறார் ஒவ்வொரு பொருளாக பிடுங்கி வம்பு வளர்த்துகிறார் ராதிகா. பிறகு கோபியை பார்த்து நீ ரொம்ப மாறிட்ட கோபி எனக் கூறுகிற அதற்கு கோபி நான் இல்ல நீதான் சுத்தமா மாறிட்ட.  எப்ப பாரு சண்டை போடுற என் பொண்ணோட வீடியோ பார்த்ததுக்கு போன புடுங்கி உடைச்சுட்ட நீதான் சுத்தமா மாறிட்ட என கூறிக் கொண்டிருக்கும் பொழுது என்னையும் மயூவையும் நீங்க சுத்தமா மறந்துட்டீங்க எனக்  ராதிகா கூற இத்துடன்   இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment