பவ்வியமாக இருக்கும் பாக்கியலட்சுமியின் மருமகள் அமிர்தாவா இது.! அதுக்குன்னு இவ்வளவு வெறித்தனமா..

baakiyalakshmi amritha
baakiyalakshmi amritha

Baakiyalakshmi amritha :விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது ஆனாலும் சமீப காலமாக பாக்கியலட்சுமி சீரியல் சுவாரசியம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கோபி பாக்கியாவை டிவார்ஸ் செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்வார் அதன் பிறகு பாக்கியா தான் குடும்பம் மொத்தத்தையும் கவனித்து வருகிறார்.

அதேபோல் பாக்கியாவிற்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இதில் முதல் மகன் செழியன் ஜெனி என்பவளை திருமணம் செய்து கொள்வார் இரண்டாவது மகன் எழில் ஏற்கனவே திருமணமான பெண்ணான அமிர்தாவை திருமணம் செய்து கொள்வார் முதலில் வீட்டில் உள்ளவர்கள் அமிர்தாவை ஏற்றுக் கொள்ள தயங்குவார்கள் பிறகு போகப்போக அமிர்தாவையும் மருமகளாக ஏற்றுக் கொள்வார்கள்.

இதையும் படியுங்கள் : இங்கிலீஷ் கிளாசை நிறுத்திய பாக்கியா வீட்டிற்கு வந்து நோட்ஸ் கொடுத்த பழனிச்சாமி.! வெளியே நின்னு வேவு பார்த்த கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகா திடீரென பாக்கியலட்சுமி சீரியல் இருந்து விலகுவதாக தகவல் கிடைத்துள்ளது அதே போல் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் வேறொரு நடிகை நடிக்க வந்துவிட்டார் எனவும் அவர் வேறு யாரும் கிடையாது காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அக்ஷிதா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இனி பாக்கியலட்சுமி சீரியலில் போக போக அமிர்தாவின் கதாபாத்திரம் வில்லி கதாபாத்திரமாக மாறும் என்பதால் அது தனக்கு செட்டாகாது என கிருத்திகா விலகுவதாக தகவல் கிடைத்துள்ளது இந்த நிலையில் ரித்திகா ஜிம்மில்  கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்து “இன்றைய வலி நாளைய பலம்” என பதிவு செய்துள்ளார்.

ஆனால் ரித்திகா இதுவரை பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து விலகுவதாக எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை அதேபோல் தொலைக்காட்சி நிறுவனமும் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்