எங்க அம்மாவை ஏமாத்திட்டாரு அடுத்தது நீங்கதான் ராதிகாவை பார்த்து சொன்ன எழில் – பரபரப்பான கட்டத்தில் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு

Baakiyalakshmi
Baakiyalakshmi

Baakiyalakashmi september 19 : இன்றைய எபிசோடில் ஒரு வழியாக லைசன்ஸ் கிடைச்சு பாக்கியா, இனியா, ஈஸ்வரி, செல்வி நான்கு பேரும் காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர் அப்பொழுது பாக்யா இனியாவிடம் எழிலுக்கு போன் பண்ணி வீட்டுக்கு வந்துட்டு இருக்கோம் என்று சொல்ல சொல்றாங்க..

இனியாவும் எழிலுக்கு போன் பண்ணுகிறது அப்பொழுது எழில் பயப்படாதீங்க எனக்கு தெரிஞ்ச பிரண்டோட அங்கிள் ஒருத்தவரு போலீஸா இருக்காரு அவர்கிட்ட பேசுறேன் என்று சொல்ல, இனியா லைசன்ஸ் கிடைச்சுச்சு பழனிச்சாமி அங்கிள் தான் அனுப்புனாரு. நாங்க இப்ப வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கோம் என்று சொல்ல எழில் ரொம்ப சந்தோஷப்படுகிறார்.

மேலும் தாத்தா மற்றும் அமிதாவிடமும் இதை சொல்கிறார்.. பழனிச்சாமி சார் தான் அம்மாவோட லைசென்ஸ் அனுப்பி இருக்காரு அவருக்கு முதல்ல நன்றி சொல்லணும் என்று எழில் பழனிச்சாமிக்கு போன் பண்ணி ரொம்ப நன்றி சார் கடைசி நேரத்தில் அம்மாவோட லைசென்ஸ் அனுப்பி வச்சிட்டீங்க எங்க இருக்கீங்க என்று கேட்க..

நான் பக்கத்துல தான் இருக்கேன் என பழனிச்சாமி சொல்வதும் எழில் சரி நான் வந்து பார்க்கிறேன் என பழனிச்சாமியை நேரில் வந்து பார்க்க வருகிறார். அங்கு பழனிச்சாமிக்கு மறுபடியும் நன்றி சொல்லிவிட்டு அம்மா லைசன்ஸ் உங்களுக்கு எப்படி கிடைச்சது உங்க கிட்ட கொடுத்து வெச்சிருந்தாங்களா என்று கேட்க..

என்கிட்ட கொடுத்து எல்லாம் வைக்கல, அது உனக்கு வேணா விடு என்று சொல்ல, எனக்கு தெரிய கூடாதுன்னு நினைக்கிறீங்களா எதுவா இருந்தாலும் சொல்லுங்க என்று சொல்ல நான் பக்கத்துல இருக்குற ஒரு ஹோட்டலுக்கு போய் இருந்தேன் அங்கு உங்க அப்பா அவர் பிரெண்டு கூட பேசிட்டு இருந்தாரு..

அப்ப சொன்னாரு பாக்யா லைசென்ஸ் என்கிட்ட தான் இருக்கு என்று, இதெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு கோவப்படாத என்று பழனிச்சாமி எழிலிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார் ஆனால் எழில் ராதிகா வீட்டிற்கு வருகிறார் அங்கு கோபியும் ராதிகாவும் மாறி மாறி சாப்பாடு ஊட்டி கொண்டு  இருக்கின்றனர். அப்பொழுது வந்த எழில் நீங்க பண்றது சுத்தமா சரியில்லை..

நீங்க இந்த அளவுக்கு கேவலமா நடந்துப்பீங்கன்னு நினைக்கல உங்க அம்மா, பொண்ணோட எங்க அம்மா லைசன்ஸ் இல்லாம ரோட்ல நின்னுட்டு இருக்காங்க, நாங்க எல்லாம் லைசன்ஸ் தேடிகிட்டு இருக்கோம் நீங்க எங்களுக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு திருட்டுத்தனமா வந்து லைசன்ஸ் எடுத்துட்டு போய் இருக்கீங்க என்று திட்டுவதற்கு கோபி அதான் சொல்ல வந்தத சொல்லிட்டள, கிளம்புடா என்று சொல்கிறார் பிறகு எழில் ராதிகாவிடம் இவரெல்லாம் நம்பி எப்படித்தான் கல்யாணம் பண்ணீங்களோ..

எங்க அம்மாவை ஏமாற்றினார் அடுத்து உங்களையும் இப்படி தான் ஏமாற்றுவாரு என்று சொல்லிவிட்டு இனிமேல் இந்த விஷயத்துல தலையிடாதீங்க என மிரட்டி விட்டு எழில் கிளம்பி விட்டார்.. பிறகு கேரளா போனவர்கள் எல்லோரும் வீட்டுக்கு வந்து விட்டனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..