விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் நிலையில் ராதிகா தொடர்ந்து ஈஸ்வரி பாக்யாவிடம் பிரச்சனை செய்து வருவதால் எப்படியாவது ராதிகாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என அனைவரும் நினைத்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பாக்யா இன்னும் ஒரு மாதத்தில் 18 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து விட்டால் வீட்டை விட்டு கிளம்பி விட வேண்டும் என கூறி இருக்கும் நிலையில் இதற்கு கோபியும் ஒப்புக்கொண்டு உள்ளார். எனவே எப்படியாவது 18 லட்ச ரூபாய் பணத்தை தர வேண்டும் என்பதற்காக பாக்யா கடினமாக உழைத்து வருகிறார்.
இவ்வாறு தனது அம்மாவிற்கு உதவி செய்து கோபி ராதிகாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக எழிலும் தன்னால் முடிந்த உதவியை செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் பாக்யா பழனிச்சாமியின் சொந்தக்காரர் கல்யாணத்திற்கு சமைப்பதற்காக சென்று உள்ளார். அதாவது பாண்டிச்சேரியில் மூன்று நாளைக்கு மிகவும் பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் திருமணத்தை சமைப்பதற்காக சென்றிருக்கும் நிலையில் இதே திருமணத்திற்கு ராதிகா கோபியும் சென்றிருக்கிறார்கள்.
ராதிகா இந்த மூன்று நாட்களுக்கு பாக்கியாவின் தொல்லை மற்றும் உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களை பார்க்காமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கோபியிடம் கூறியுள்ளார். அந்த வகையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ரூமிற்கு சென்றவுடன் கோபி ரொமான்டிக்காக ராதிகா இங்கு வேற யாரும் இல்ல நீயும் நானும் மட்டும் தான் என கூறுகிறார்.
செம ஜாலி பர்டிகுலர்லி அந்த இடியட் பாக்யா இங்க இல்ல எனக்கூற இந்த நேரத்தில் ராதிகா வெளியில் போன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது செல்வி வருவதை பார்த்து அதிர்ச்சி அடைய பிறகு ரூமிற்கு செல்கிறாராம் கோபி செல்வியை பார்த்ததாக கூற பழனிச்சாமியின் செல்வியும் இங்கு இருக்காங்க அப்பனா பாக்யா என அதிர்ச்சி அடைகிறார் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.