விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எடுத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் சமீப காலங்களாக மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருவதால் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.
மேலும் சில வாரங்களாக எழிலின் திருமண எபிசோடுகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் எழில் தான் காதலித்த அமிர்தாவை திருமணம் செய்து கொள்வாரா இல்லை தன்னுடைய குடும்பத்தினர்களுக்காக வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள போகிறாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது அந்த வகையில் எழிலும் தன்னுடைய குடும்பத்தினர்களுக்காக வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் அமிர்தா மண்டபத்திற்கு வந்து அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டார்.
மேலும் அமிர்தாவிடம் எழில் பேசும் பொழுது அதனை பாக்யா கேட்ட நிலையில் அதிர்ச்சி அடைகிறார் பிறகு யாருக்கும் தெரியாமல் அமிர்தாவை மணப்பெண் போல் அலங்கரித்து அவருடைய மாமனார் மாமியாரையும் வரவழைத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் பாக்கியா வர்ஷினி எழிலின் பக்கத்தில் அமர உடனே வர்ஷினி நில்லு எனக் கூறுகிறார்.
இதனால் அதிர்ச்சி அடைய இதற்கு மேல் இந்த திருமணம் நடக்காது இதில் என்னுடைய மகனுக்கு விருப்பமில்லை எனக் கூற அதற்கு ஈஸ்வரி என்ன பேசுற எழிலுக்கு இந்த கல்யாணம் தான் நல்லது எழில் நீ உட்காரு என கூறுகிறார். பிறகு பாக்கியா அமிர்தாவை அழைத்து வர அனைவரும் அதிர்ச்சடைகின்றனர். உடனே கோபி அவ சொல்றத யாரும் கேட்காதீங்க நம்ம திருமணத்தை நடத்துவோம் என கூறுகிறார்.
பிறகு வர்ஷினியின் அப்பா என்னை என்னுடைய சொந்தக்காரர்களின் முன்பு அவமானப்படுத்தி விட்டீர்கள் இதற்கு மேல் இவன் எப்படி படம் எடுக்கிறான் என்பதை பார்க்கிறேன் என சண்டை போட பிறகு எழில் வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை அமிர்தாவை தான் நான் காதலிக்கிறேன் என உண்மையை கூறுகிறார்.
எனவே ஈஸ்வரி நாங்க சொன்னதுக்கு எல்லாம் நல்லவன் போல் அமைதியாக இருந்துவிட்டு இப்ப வந்து இப்படி பண்ற இல்ல இதற்கு மேல் உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் கூற பிறகு கோபி எழில் வாழ்க்கைக்கு நல்லது செய்வதாக கூறி மண்ணள்ளி போட்டுட்ட என பாக்யாவை திட்டுகிறார் இதோ இன்றைய எபிசோடு நிறைபடுகிறது.