பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசிக்கு இவ்வளவு பெரிய மகளா.! வைரலாகும் வீடியோ

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  அந்த வகையில் கொரோனா காரணத்தினால் பல சீரியல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டது ஒரு சில சீரியல்களில் மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது பல சீரியல்கள் புதிதாக அறிமுகமாகி உள்ளது.

அந்த வகையில் தற்பொழுது டிஆர்பி-யில் தொடர்ந்து முன்னணி வகிக்கும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்பொழுது தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கியுள்ளது. இந்த சீரியல் ஒரு குடும்பத் தலைவி எவ்வளவு அவமானங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து இயக்கப்படுவதால் குடும்ப இல்லத்தரசிகள் மற்றும் முதியவர்களுக்கு பிடித்த சீரியலாக நிகழ்கிறது.

தற்பொழுது தான் இளசுகளுக்கு பிடித்த ஒரு சில காதல் காட்சிகள் இடம்பெற்று வருகிறது.  இந்த சீரியலின் மூலம் பல நடிகர், நடிகைகள் புதிதாக அறிமுகமாகி உள்ளார்கள். இந்த சீரியலில் குடும்பத்தலைவியாக நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை சுசித்ரா.

இவர் பாக்கியா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவ்வாறு இந்த சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வரும் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் செம குத்தாட்டம் போட்ட புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது தனது மகளுடன் டப்மாஸ் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சுசித்ராவின் மகள் இவர்தானா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.