திருமணம் வரை சென்று நின்று போன பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் காதல்.!

0

கொரோனாவின் முதல் அலைக்குப் பிறகு  சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பாகும் பொழுது பல சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இன்னும் சில சீரியல்கள் பழைய பெயரை மட்டும் வைத்து முழுவதும் கதை மாற்றத்துடன் ஒளிபரப்பானது அதிலும் சில சீரியல்கள் புதிதாக அறிமுகமானது.

அந்த வகையில் புதிதாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தற்போதுதான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கியுள்ளது.

இந்த சீரியல் குடும்பத்தில் இருக்கும் ஒரு தலைவி எவ்வளவு பிரச்சனைகளையும், அவமானங்களையும் சந்திக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் இல்லதரசிகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடகமாக திகழ்கிறது.

இந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் ஜெனிஃபர்.  இவர் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு மேக்கப்பின் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. எனவே மாடலிங்காக பணியாற்றத் தொடங்கிய இவர் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

தற்பொழுது ஜெனிஃபரை பற்றி சில தகவல்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே.சுரேஷ் காதலித்து வந்துள்ளார். அதோடு இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் பத்திரிக்கையாளர்கள் கூறி வந்தார்கள்.

jenifer 9
jenifer 9

ஆனால் திடீரென்று ஆர்கே.சுரேஷ் தயாரிப்பாளர் ஒருவரின் மகளை திருமணம் செய்து கொண்டு தற்பொழுது இவருக்கு ஒரு அழகிய குழந்தையும் உள்ளது.  ஆனால் எதற்காக இவர்கள் இருவரும் பிரிந்தார்கள் என்ற சரியான தகவல் தெரியவில்லை.