புள்ளி வைத்து ஆரம்பித்த பா ரஞ்சித்..! பிரபல நடிகையுடன் ரொமாண்டிக் கோலம் போடும் வாரிசு நடிகர்..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை கொண்ட திரைப்படங்களை இயக்கி வருபவர் தான் இயக்குனர் பா ரஞ்சித் இவருடைய இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்துமே சமூக வலைதள பக்கத்தில் பல சர்ச்சையான கருத்துக்களை உருவாக்க வழிவகுக்கிறது.

அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை திரைப்படம் இந்த திரைப்படம் இணையத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் தொடர்ந்து பா ரஞ்சித் மவுஸ் தமிழ் சினிமாவில் அதிகரித்துவிட்டது.

அது மட்டும் இல்லாமல் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் சமீபத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் இந்த திரைப்படத்தில் ஒரு ஆணும் பெண்ணும் காதல் மற்றும் ஒரு  பாலின காதல் என வித்தியாசமான கதை கொண்ட திரைப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்த தஷாரா விஜயன் மற்றும் சபீர் ஹரிகிருஷ்ணன் கலையரசன் போன்றவர்கள் நடித்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கி இருந்தாலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது அந்த வகையில் இந்த திரைப்படத்தை ரஜினி கூட பார்த்துவிட்டு அவரை பாராட்டி உள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபல மலையாள நடிகரின் மகன் காளிதாஸ் ஜெயராமன் அவர்கள் நடிகை துஷாரா விஜயனை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இவ்வாறு வெளிவந்த தகவல் கோடம்பாக்கத்தில் மிக  வைரலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் இவை எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாது ஆனால் பிரபலங்கள் ஒன்றாக திரைப்படங்களை இணைந்து நடிக்கும் பொழுது காதல் மலர்வது வழக்கமான செயல்தான் அந்த வகையில் பல்வேறு காதல் ஜோடிகள் தமிழ் சினிமாவில் உள்ளார்கள் என்பதும் அவர்கள் திருமணம் முடிந்து நன்றாக வாழ்ந்து வருவார்களும் உள்ளார்கள் பாதியிலேயே விவாகரத்து ஆனவர்களும் உள்ளார்கள்.

Leave a Comment