இயக்குனராக அவதாரம் எடுப்பதற்கு முன்பே ஒரு திரைப்படத்தில் நடித்துள்ள பா ரஞ்சித்..! இணையத்தில் லீக்கான வீடியோ..!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் பா ரஞ்சித். பொதுவாக இவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே சர்ச்சையில் முடிவது வழக்கம்தான் அந்த வகையில் இவர் இயக்கம் திரைப்படங்கள் பெரும்பாலும் வித்தியாசமாக இருப்பது மட்டுமில்லாமல் அவை ஒரு தரப்பு மக்களை மட்டும் கவரும் அளவிற்கு இருக்கும்.

அந்த வகையில் இவர் இயக்கிய அட்டகத்தி மெட்ராஸ் காலா கபாலி போன்ற திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது மட்டும் இல்லாமல் அவை சில தரப்பு மக்களிடையே பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிட்டது என்று சொல்லலாம்.

அதே போல தான் சமீபத்தில் அவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படமும் அமைந்தது இந்த திரைப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்திருப்பார் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் பல விமர்சனத்தை உருவாக்கினாலும் மாபெரும் ஹிட்டு கொடுத்து வசூலில் சாதனை படைத்தது என்றே சொல்லலாம்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தில் முழுமூச்சாக இறங்கியுள்ளார் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடையும் நிலையில் இந்த திரைப்படம் ஆனது இந்த மாத இறுதியில் திரைக்கு வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க நமது பிரபல இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் இயக்குனராக வலம் வருவதற்கு முன்பாகவே ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது அது எந்த திரைப்படமும் கிடையாது 2006 ஆம் ஆண்டு வெளியான தகப்பன்சாமி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் அந்த திரைப்படத்தில் நமது இயக்குனர் வட இந்தியர் போல மேடையில் ஹிந்தியில் மைக் பிடித்து பேசும் நபராக நடித்துள்ளார். இவ்வாறு வெளிவந்த இந்த தகவல் மற்றும் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment