தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விஜய் இவர் தற்பொழுது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சங்களை பெற்றுள்ளது அதுமட்டுமில்லாமல் முதல் பான் இந்திய திரைப்படமாக விஜய்க்கு இந்த திரைப்படம் அமைந்தது.
இன்று முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார் ஆனால் தற்பொழுது யாரும் அசைக்க முடியாத உயரத்தில் தளபதி விஜய் இருக்கிறார் இதற்கெல்லாம் காரணம் அவருடைய திறமை தான் என பலரும் கூறி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்களில் இவரும் ஒருவர்.
இந்தநிலையில் தளபதி விஜய் 2007ஆம் ஆண்டு நடித்து வெளியாகிய திரைப்படம் தான் அழகிய தமிழ் மகன் இந்த திரைப்படத்தில் விஜய் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்திருப்பார். அதேபோல் இந்த திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.

அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ஒரு சிறுமி நடித்திருப்பார் அந்த சிறுமி இறப்பிற்கு பிறகு தனக்குள் இருக்கும் சக்தியை பற்றி தெரிந்து கொள்வார். இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன நாம் குழந்தையாக பார்த்த அந்த சிறுமி பெயர் நிவேதிதா தற்பொழுது மடமடவென வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

20 வயதைக் கடந்த நிவேதிதா தற்போது துபாயில் செட்டில் ஆகி உள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இவரைப் பார்த்தால் மாடலிங் நடிகை போல் இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதன்பிறகு பார்த்தால் இவர் அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை என கண்டறிந்துள்ளார்கள் ரசிகர்கள்.
