அடேங்கப்பா அழகி படத்தில் நடித்த நடிகையா இது.! அதுவும் தலைக்கு உயர்ந்த மகன் வேற இருக்கிறாரா வைரலாகும் புகைப்படம்.!

2002 ஆம் ஆண்டு தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் அழகி இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்திருந்தார் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில் சண்முகமும் தனலட்சுமி சிறுவயதில் இருந்து கிராமத்து சூழ்நிலையில் படித்து வந்த மாணவர்கள். தனலட்சுமியை பலமுறை ஆசிரியர்களிடம் இருந்து காப்பாற்றும் சண்முகம் அவர் மீது காதல் கொள்வார். அதேபோல் தனலட்சுமி சண்முகம் மீது காதல் கொள்வார் இருவரும் குடும்ப சூழ்நிலை காரணமாக பிரிந்து விடுவார்கள்.

தனலட்சுமி ஏழ்மையான வரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து வருவார் ஆனால் சண்முகம் வசதி படைத்தவராக வளர்மதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வசதியாக வாழ்ந்து வருவார் திடீரென தனலட்சுமியை சண்முகம் பார்த்து விடுகிறார், அவர் ஏழ்மையாக இருப்பதை பார்த்த சண்முகம் அவரை கூட்டிக்கொண்டு வந்து தன்னுடைய வீட்டில் ஒரு வேலையை தருகிறார்.

பிறகு சண்முகம் மற்றும் தனலட்சுமி இருவரின் செயலால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை தான் இந்த திரைப்படத்தின் முடிவாகும். இந்த திரைப்படத்தில் தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நந்திதா தாஸ் இவர் தமிழை தாண்டி ஹிந்தி, உருது, கன்னடம், பெங்காலி மலையாளம், ஒரியா என பல மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

nandita

அழகி திரைப்படத்திற்கு பிறகு கன்னத்தில் முத்தமிட்டால் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை. நீண்ட நாளாக இவரை எந்த ஒரு திரைப்படத்திலும் பார்க்க முடியவில்லை இந்த நிலையில் மற்ற நடிகைகளை போல் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் இவர் அடிக்கடி குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

nandita

நந்திதா அவரின் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு தோலுக்கு மேல் வளர்ந்த மகன் இருக்கிறாரா என ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

nandita

Leave a Comment

Exit mobile version