நிலாவிடம் சிக்கிய பல்லவனின் அம்மா.! பரபரப்பின் உச்சத்தில் அய்யனார் துணை…

அய்யனார் துணை இன்றைய எபிசோடில் நிலாவின் அம்மாவிற்கு பிறந்தநாள் என்பதால் கோவிலுக்கு சென்று அவர் பெயரில் அர்ச்சனை செய்கின்றனர். பின்னர் சோழனும் நிலாவும், கோவிலில் உட்கார்ந்து  பேசிக் கொண்டிருக்கின்றார் அப்போது நிலா பல்லவனின் அம்மா மீது ஏதோ தப்பு இருக்கு என சொல்கிறார்.

உடனே சோழன்  அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது இப்போதான்  பல்லவன் ரொம்ப சந்தோஷமா இருக்கான் என சொல்கிறார். அதனைத் தொடர்ந்து அடுத்த சீனில் பல்லவனின் அம்மா வீட்டில் எங்கு பணம் இருக்கிறது என தேடிக் கொண்டிருக்கிறார். அப்போது வடக்கன் போன் பண்ணி நான் வீட்டுக்கு வெளியே இருக்கேன் வா என கூப்பிடுகிறார்.

பல்லவனின் அம்மா இங்க ஏன் வந்த அவங்க யாராவது பாத்துட்டா பிரச்சனையாகும் என சொல்கிறார். அதற்கு அந்த வடக்கன் அவங்க எல்லாரும் இப்ப வெளில போயிருப்பாங்கன்னு எனக்கு தெரியும் என சொல்கிறார். அதோடு உன்னை பணத்தை எடுத்துக்கிட்டு உடனே வர சொன்னால் என்ன உன் பையன் மேல பாசம் வந்துருச்சா இங்கே இருக்கலாம் என்று முடிவு பண்ணிட்டியா என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு சோழனின் அப்பா வந்து விடுகிறார். அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு அடிக்க வருகிறார் ஆனால் அந்த வடநாட்டுக்காரன் அங்கிருந்து ஓடி விடுகிறான். உடனே பல்லவனின் அம்மாவை இப்போ எதுக்கு இங்க வந்து எல்லாத்தையும் ஏமாத்திட்டு இருக்க என கழுத்தை நெறித்தபடி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பல்லவன் அதை பார்த்துவிட்டு உங்களை நான் விடமாட்டேன் எங்க அம்மாவுக்கு ஏதாவது ஒன்னு ஆயிடுச்சுன்னா உங்கள கொன்னுடுவேன் என மிரட்டுகிறார்.

மேலும் நிலா சேரனிடம் நிறைய பணம் கொடுத்து கொண்டு போய் வையுங்கள் என சொல்கிறார். அதனைப் பல்லவனின் அம்மா பார்ப்பதை நிலா கவனித்து விடுகிறார். இரவு அனைவரும் தூங்கிக் கொண்டு இருக்கின்றனர் அப்போது நிலா ஆபீஸ் ஒர்க் செய்து கொண்டிருக்கிறார். மேலும் கிச்சனுக்கு தண்ணீர் குடிப்பதற்காக செல்கிறார்.

அப்போது பலவனின் அம்மா அந்த வடக்கனிடம் பணத்தை திருடிக் கொண்டு சீக்கிரமாக வந்து விடுகிறேன் என பேசிக்கொண்டு இருப்பதை நீலா பார்த்து விடுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.