ஆயுத பூஜை ஸ்பெஷலாக டிவி-யில் ஒளிபரப்பப்படும் புது திரைப்படங்கள்.! அட இந்த புது திரைப்படமும் உண்டா.. அப்போ டிஆர்பி.?

ayudha pooja special movies in tamil channels vijay tv, sun tv, zee tamil,  : ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை என்பதால் சின்னத்திரையில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புது தமிழ் படங்கள் அது குறித்து பார்க்கலாம். பண்டிகை என்றாலே சின்னத்திரை தொலைக்காட்சிகளில் புத்தம் புது படங்கள் வெளியாகுவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான வெளியாக உள்ளது.

இவ்வாறு தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாமல் திரையரங்களிலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அப்படி நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப் போட்டு வருகிறது. தற்பொழுது  சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தமிழ் படங்கள் குறித்து பார்க்கலாம்.

சன் டிவி: சன் டிவியில் ஆயுத பூஜை தினத்தன்று வருகின்ற 23ஆம் தேதி காலை 11 மணிக்கு சூர்யா நடித்த சிங்கம் 2 திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் அன்று மதியம் 2:30 மணிக்கு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த உனக்கும் எனக்கும் மற்றும் மாலை 6:30 மணிக்கு சிவகார்த்திகேயனின் மாவீரன் போன்ற படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து 24ஆம் தேதி விஜயதசமி தினத்தன்று காலை 11 மணிக்கு ரஜினியின் பிளாக்பஸ்டர் ஹெட் அடித்த பேட்ட, மதியம் 3:30 மணிக்கு வடிவேலு ஹீரோவாக நடித்து கலவை விமர்சனத்தை பெற்ற நாய்சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்கள் ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவி: விஜய் டிவியில் ஆயுத பூஜை ஸ்பெஷலாக உதயநிதி ஸ்டாலின், வடிவேலு இணைந்து நடித்த மாமன்னன் 23ஆம் தேதி காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் விஜய் தசமி அன்று காலை 10:30 மணிக்கு மணிகண்டன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்ற பேமிலி எண்டர்டைமென்ட் படமான குட் நைட் வெளியாக உள்ளது.

ஜீ தமிழ்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆயுத பூஜை தினத்தன்று காலை 10:30 மணிக்கு அருண் விஜய், பிரியா சங்கர் இணைந்து நடித்த யானை படம் ஒளிபரப்பாக உள்ளது. அன்று மதியம் 1:30 மணிக்கு சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் ஒளிபரப்பாகிறது. மேலும் விஜயதசமி அன்று பிற்பகல் 3:30 மணிக்கு சத்யராஜ், அஜ்மல் நடித்த தீர்க்கதரிசி படமும்  ஒளிபரப்பாகிறது.

கலைஞர் டிவி: ஆயுத பூஜை தினத்தன்று வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் மதியம் 1.30 மணிக்கும், பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே 6:00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் விஜயதசமி அன்று பிற்பகல் 1:30 மணிக்கு ஜெயம் ரவியின் அகிலன் படம் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்